நாடு முழுவதும் 542 மக்களவைத் தொகுதிகளுக்கு நடைப்பெற்ற தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகவுள்ளது. தற்போது வரை வெளியாகியுள்ள சுற்றின் முடிவுகளில் இந்தியா அளவில் பாஜக முன்னிலை பெற்று இருந்தாலும், தமிழகத்தில் திமுக முன்னிலையில் இருந்து வருகிறது.
தமிழகம் ஆளும் அ.தி.மு.க சமிபகாலமாக பல்வேறு பரபரப்பான சூழ்நிலைகளை ஏற்படுத்தி வருகின்றது. அதன் ஒரு பகுதியாக இன்று கட்சியின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பெங்களூர் சிறைச்சாலையில் உள்ள அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலாவை சந்தித்து பேசினார்.
ஓபிஎஸ் அணியுடன் பேச்சுவார்த்தை நடத்த வைத்திலிங்கம் தலைமையில் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
ஜெயலலிதாவின் மறைவுக்கு பின் அ.தி.மு.க.வில் பிளவு ஏற்பட்டு ஓபிஎஸ் அணி, சசிகலா அணி என இரு அணிகள் உதயமான நிலையில், மீண்டும் ஒன்றாக இணையும் சூழ்நிலை உருவாகி இருக்கிறது.
முதல்வர் பழனிசாமி அதிமுக தலைமை அலுவலகத்தில் மூத்த அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் அதிமுக அணிகள் இணைப்பு தொடர்பாக ஆலோசனை நடந்ததது.
தமிழக உள்ளாட்சி தேர்தலுக்கு தடை விதிக்க முடியாது உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தி.மு.க. சார்பில் சென்னை ஐகோர்ட்டில் தமிழக உள்ளாட்சி தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தை பயன்படுத்தவும், தேர்தல் பணிகளை மத்திய அரசு ஊழியர்கள் மேற்கொள்ள வேண்டும் என கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை கடந்த 21-ம் தேதி நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.
தமிழகத்தில் நடக்க இருக்கும் உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட விரும்புபவர்கள் வரும் 16-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்தியில் கூறியதாவது:- வரும் 16-ம் தேதி காலை 8.30 மணி முதல் விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்படும். வரும் 22-ம் தேதி மாலை 8 மணி வரை உரிய கட்டணத்தை செலுத்தி விண்ணப்பம் செய்யலாம். சென்னை மாநகராட்சிக்கான விண்ணப்பங்கள் கட்சி தலைமையகத்தில் வழங்கப்படும். மற்ற மாவட்டங்களில் மாவட்ட தலைமை கழகத்தில் விநியோகம் செய்யப்படும் என தனது செய்தி குறிப்பில் கூறியுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.