பயனர்களுக்கு புதிய அம்சம் ஒன்று சேரவிருக்கிறது. Background gradient filter எனப்படும் இந்த ஃபில்டர் இது தானாகவே ஸ்டேட்டஸில் பிண்ணனியை சேர்க்கும்
வாட்ஸ்அப் தனது செயலியை கடந்த பல மாதங்களாக மேம்படுத்தி வருகிறது. அண்மையில் பல புதிய அம்சங்கள் பரிசோதிக்கப்பட்டன
அந்த வரிசையில் வாட்ஸ்அப்பில் பேக்கிரவுண்ட் கிரேடியன்ட் ஃபில்டர் என்ற அம்சம் விரைவில் வரப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன
வாட்ஸ்அப்பின் வரவிருக்கும் அம்சங்களைக் கண்காணிக்கும் வலைத்தளமான wabetainfo இந்த தகவலை வெளியிட்டுள்ளது
இந்த அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டதும், வாட்ஸ்-அப் செயலியை கூகுள் ப்ளேஸ்டோரில் மேம்படுத்துவதம் மூலம் பயன்படுத்திக் கொள்ளலாம்
கூகுள் ப்ளே ஸ்டோரில் கிடைக்கும் ஆண்ட்ராய்டு 2.24.16.2 அப்டேட், மெசேஜிங் பிளாட்பார்ம் பீட்டா பயனர்களுக்கான பின்னணி கிரேடியன்ட் ஃபில்டர் அம்சத்தை வெளியிட்டுள்ளது
கிரேடியன்ட் ஃபில்டர் பயன்படுத்துவது தொடர்பான சோதனை தொடங்கியுள்ளது. விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது
wabetainfo வலைதளத்தில் வெளியான செய்தியின் அடிப்படையில் எழுதப்பட்ட கட்டுரை இது. இந்தத் தகவலை ஜீ மீடியா தனிப்பட்ட முறையில் சரிபார்க்கவில்லை