வாட்ஸ்அப்: பழைய மெசேஜை இனி ஈஸியாக தேடி பிடிக்கலாம்..!
பழைய மெசேஜ்களைத் தேடுவதற்கு புதிய அம்சம் ஒன்றை வாட்ஸ்அப் அறிமுகம் செய்ய உள்ளது.
அதாவது குறிப்பிட்ட தேதியில் பகிரப்பட்ட மெசேஜ்களை மட்டும் தேடுவதற்கான அம்சத்தைக் கொண்டுவர உள்ளது.
வாட்ஸ்அப் இந்த வசதியை இப்போது சோதனை முறையில் பீட்டா பயனர்களுக்கு மட்டும் வெளியிட்டுள்ளது.
இந்த அம்சம் வாட்ஸ்அப் வெப் மற்றும் iOS வாட்ஸ்அப் செயலியில் இப்போதைக்குக் கிடைக்காது.
ஆனால் ஆண்டிராய்டு மொபைல் வைத்திருப்பவர்கள் கூகுள் பிளே ஸ்டோரில் பீட்டா பயனராக இருந்தால், அப்டேட் மூலம் இந்த வசதியைப் பயன்படுத்திப் பார்க்கலாம்.
இந்த அம்சம் பயனர்கள் குறிப்பிட்ட தேதிகளின்படி பழைய செய்திகளைத் தேட அனுமதிக்கும்.
பயனர்கள் தேடல் ஆப்ஷனைக் கிளிக் செய்யும்போது, புதிதாக காலண்டர் ஆப்ஷனும் தோன்றும்.
காலண்டர் ஆப்ஷனைக் கிளிக் செய்த பிறகு, குறிப்பிட்ட தேதியைத் தேர்வு செய்து அந்த நாளில் பகிரப்பட்ட மேசேஜ்களை மட்டும் தேடிப் பார்க்கலாம்.
இது உரையாடல்களைத் தேடும் செயல்முறையை மிகவும் எளிதாக்கும்.