இந்தியாவின் ஸ்மார்ட்போன் சந்தை, மிக வேகமாக வளர்ந்து வருகிறது. இன்றைய தினத்தில் ஸ்மார்ட்போன் இல்லாதவர்களின் எண்ணிக்கையை விரல் விட்டு எண்ணிவிடலாம்.
வாடிக்கையாளர்களை கவர, ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர்கள், தினம் தினம் புது ஃபோன்களை சந்தையில் அறிமுகப்படுத்திய வண்ணம் உள்ளனர்.
சிறந்த ஸ்மார்ட்போனை தேர்ந்தெடுப்பது எப்படி என்ற குழப்பம் அனைவருக்கும் இருக்கும். இந்நிலையில், ஸ்மார்போன் வாங்கும் போது மனதில் கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்களை அறிந்து கொள்ளலாம்.
ஸ்மார்ட்போன் வாங்குவதற்கு முன்னால், ஸ்மார்ட் போனில் உள்ள திரையளவு உங்கள் உபயோகத்திற்கு ஏற்ற வகையில், அதிகமாக உள்ளதா அறிந்து கொள்ள வேண்டும்.
ஸ்மார்ட்போன் வேகமாக செயல்படும் வகையில் ப்ராசஸர் இருக்க வேண்டும். அந்த வகையில் லேட்டஸ்டான வெர்ஷன் உள்ள போனை தேர்ந்தெடுப்பது சிறப்பு.
அதிக ரேம் கொண்ட்ட போன், துரிதமாக இயங்கும். இத்னால், ஸ்டோரேஜ் பிரச்சனையும் அதிகம் ஏற்படாது.
நீங்கள் புகைப்படங்கள் எடுப்பதில் ஆர்வம் கொண்டவர் என்றால், போனில் உள்ள கேமிரா அதிக மெகாபிக்ஸல் திறன் கொண்டதா என்பதை அறிந்து கொண்டு வாங்குவது சிறப்பு.
போனின் பேட்டரி அம்சம் பற்றி அறிந்து கொள்வது மற்ற எல்லாவற்றையும் மிக முக்கியம். நீண்ட நேரம் பேட்டரி நீடித்திருக்க 5000 mAh பேட்டரி அவசியம்.
உங்களுக்கு கேமிங் விளையாடுவதில் ஆர்வம் என்றால், 60000 mAh பேட்டரி அவசியம். இதனால், நீங்கள் அதிகம் விளையாடினாலும், பேட்டரி நீடித்திருக்கும்.