முன்பதிவில்லாத ரயில் டிக்கெட்டுகளை மொபைலில் பதிவு செய்வது எப்படி?
UTS ரயில் டிக்கெட் முன்பதிவு ஆண்ட்ராய்டு செயலியை பயன்படுத்தி பயணிகள் முன்பதிவில்லாத மற்றும் முன்பதிவு டிக்கெட்டுகளை புக் செய்யலாம்
அதற்கு முதலில் Google Play அல்லது Apple iOS-ல் UTS மொபைல் செயலியை பதிவிறக்கவும்.
உங்கள் ஃபோன் எண், பெயர், பாலினம் மற்றும் பிறந்த தேதியுடன் செயலியில் பதிவு செய்யவும்.
முறையாக அனைத்து தகவல்களையும் கொடுத்த ஐடி கிரியேட் செய்த பிறகு பாஸ்வேர்டு கொடுங்கள்
உங்களால் எளிதில் ஞாபகம் வைத்துக் கொள்ளகூடிய வகையில் பாஸ்வேர்டு இருந்தால் உபயோகிக்க சிறந்ததாக இருக்கும்
லாகின் நடைமுறைகளை முடித்த பிறகு ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய என்ற ஆப்சனை கிளிக் செய்யவும்
அதில் unreserved டிக்கெட் ஆப்சனை கிளிக் செய்து, காகிதமற்ற டிக்கெட் ஆப்சனை தேர்ந்தெடுக்கவும்
பின்னர் புறப்படும் இடம், சேரும் இடத்தை தேர்வு செய்யுங்கள்
அடுத்து டிக்கெட் புக்கிங்கை கிளிக் செசய்து யுபிஐ, நெட்பேங்கிங் ஆப்சன் மூலம் பணம் செலுத்துங்கள்
-யுடிஎஸ் செயலியில் “ஷோ டிக்கெட்” விருப்பத்தைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் டிக்கெட்டுகளைப் பார்க்கலாம்.
இந்த டிக்கெட்டை வைத்து சாதாரண ரயில் பயணப் பெட்டியில் பயணிக்க முடியும்.
பொதுவாக ஜெனரல் டிக்கெட் ஆன்லைன் மூலம் எடுத்த பயணிகள், ஆன்லைனில் டிக்கெட் எடுத்த பிறகு 3 மணி நேரத்துக்குள் இருக்கும் எந்த ரயில்களிலும் பயணிக்கலாம்.