ஜியோ, ஏர்டெல் மற்றும் விஐ தங்கள் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு தேவைகளை பூர்த்தி செய்ய பல்வேறு வகையான ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்குகின்றன.
ஜியோ, ஏர்டெல் மற்றும் விஐ ஆகியவற்றின் ப்ரீபெய்ட் திட்டங்களின் விலையில் எந்த திட்டம் சிறப்பானதென்று பார்க்கலாம் வாங்க.
ஜியோ ரூ.219 திட்டம் தினசரி 3ஜிபி டேட்டாவுடன் 2ஜிபி கூடுதல் டேட்டாவை 14 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்குகிறது.
ஜியோ ரூ.399 திட்டம் தினசரி 3ஜிபி டேட்டாவுடன் 6ஜிபி கூடுதல் டேட்டாவை 28 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்குகிறது.
ஜியோ ரூ.999 திட்டம் தினசரி 3ஜிபி டேட்டாவுடன் 40ஜிபி கூடுதல் டேட்டாவை 84 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்குகிறது.
ஏர்டெல் ரூ.499 திட்டம் தினசரி 3ஜிபி டேட்டாவுடன் 28 நாட்கள் வேலிடிட்டியை வழங்குகிறது. அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் மற்றும் தினசரி 100 SMS ஆகியவற்றை வழங்குகிறது.
ஏர்டெல் ரூ.699 திட்டம் 56 நாட்கள் வேலிடிட்டியுடன் தினமும் 3ஜிபி டேட்டாவை வழங்குகிறது. அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் மற்றும் தினசரி 100 SMS ஆகியவற்றை வழங்குகிறது.
விஐ (Vi) ரூ. 359 திட்டம் தினமும் 3ஜிபி டேட்டாவுடன் 28 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது. அன்லிமிடெட் வாய்ஸ் கால், தினமும் 100 SMS மற்றும் Vi Movies & TV ஆப்ஸ் போன்ற நன்மைகளை வழங்குகின்றது.
விஐ ரூ.699 திட்டம் தினசரி 3ஜிபி டேட்டாவை 56 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்குகிறது. அன்லிமிடெட் வாய்ஸ் கால், தினமும் 100 SMS மற்றும் Vi Movies & TV ஆப்ஸ் போன்ற நன்மைகளை வழங்குகின்றது.