ஐபோன் 15: இந்த பிரச்சனை இருக்கு! எச்சரிக்கை

S.Karthikeyan
Sep 29,2023
';


அண்மையில் இந்தியா உட்பட உலக நாடுகளில் ஐபோன் 15 சீரிஸ் ஃபோன்களை ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்தது.

';


இந்த சூழலில் ஐபோன் 15 மாடல் ஃபோன்கள் அதிகம் சூடாவதாக (Heat) பயனர்கள் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

';


இது ஆப்பிள் நிறுவன போனுக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக இந்த சிக்கல், புரோ மாடல்களை பயன்படுத்தி வரும் பயனர்கள் அதிகம் எதிர்கொள்வதாக தகவல்.

';


இது குறித்த தகவலை ஆப்பிள் ஆன்லைன் ஃபாரம் (Forum), எக்ஸ் போன்ற சமூக வலைதளங்களில் பயனர்கள் தெரிவித்துள்ளனர்.

';


ஃபேஸ் டைம் வீடியோவில் சாட் செய்யும்பொது அல்லது தொலைபேசி அழைப்பை மேற்கொள்ளும்போது அல்லது கேமிங்கில் ஈடுபடும்போது ஐபோன் 15-ன் பின்புறம் அல்லது பக்கவாட்டு பகுதி ஹீட் ஆவதாக பயனர்கள் தெரிவித்துள்ளனர்.

';


பயனர்களில் சிலருக்கு ஃபோனை சார்ஜ் செய்யும்போதும் இந்த சிக்கலை எதிர்கொள்வதாக தெரிவித்துள்ளனர்.

';


ஆப்பிள் டெக்னிக்கல் குழுவினரும் இந்த சிக்கல் குறித்து பயனர்களுக்கு விளக்கம் கொடுத்துள்ளதாக தெரிகிறது.

';


ஐபோன் அதிகம் சூடாவது குறித்த முந்தைய பயனர் வழிகாட்டுதலை அவர்கள் தரப்பில் பயனர்களுக்கு பரிந்துரைப்பதாக தகவல்.

';


அதீத அப்ளிகேஷன் பயன்படுத்துவது, புதிய சாதனத்தை முதல் முறையாக செட் செய்யும் போதும் இந்த சிக்கல் வரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

';


கடந்த காலங்களில் ஐபோன் சார்ந்த சிக்கல்கள் எழும்போது அதற்கு சாஃப்ட்வேர் அப்டேட் மூலம் ஆப்பிள் நிறுவனம் தீர்வு கண்டது.

';


டைப்-சி யுஎஸ்பி சார்ஜிங் போர்ட் உடன் முதல் முறையாக சந்தையில் ஐபோன் அறிமுகமாகி உள்ளது.

';


ஆப்பிள் நிறுவன வருவாயில் ஐபோனின் பங்கு ஐம்பது சதவீதம் என தெரிகிறது. அதனால் இதற்கு ஆப்பிள் விரைந்து தீர்வு காணும் என எதிர்பார்க்கப்படுகிறது.

';

VIEW ALL

Read Next Story