https://uidai.gov.in/ என்ற UIDAI இணையதளத்திற்கு முதலில் செல்லவும்.
இதில் உங்களுக்கு ஏற்கனவே கணக்கு இல்லை என்றால் புதிய கணக்கை உருவாக்கிக் கொள்ளவும்.
"My Aadhaar" என்பதை க்ளிக் செய்யவும். லாக் இன் செய்தவுடன் முகப்பு பக்கத்தில் உள்ள "My Aadhaar" பிரிவுக்கு செல்லவும்.
"Update Aadhaar Details" என்பதை செலக்ட் செய்யவும். "My Aadhaar" என்பதன் கீழ் பல ஆப்ஷன்களை காண்பீர்கள். "Update Aadhaar Details" என்பதே தேர்ந்தெடுத்து, நீங்கள் அப்டேட் செய்ய வேண்டிய தகவலை தேர்ந்தெடுக்கவும்.
செயல்முறையை தொடர உங்கள் 12 இலக்க ஆதார் எண்ணை உள்ளிட்டு கேப்சா குறியீட்டை உள்ளிடவும். அதன் பிறகு "Request OTP" என்பதை கிளிக் செய்யவும்.
பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் OTP வரும். அதை உள்ளிட்டு "Validate OTP" என்பதை கிளிக் செய்யவும்.
ஸ்டெப் 5 -இல் நீங்கள் தேர்ந்தெடுத்த தகவலை எடிட் செய்யலாம். அனைத்து தகவல்களும் சரியானவையாக இருப்பதை உறுதி செய்து கொள்ளவும்.
அப்டேட் செய்யப்பட்ட தகவல்களை ஒரு முறை சரிபார்த்து அதன் பின்னர் சப்மிட் செய்யவும். கன்ஃபர்ம் செய்தவுடன் "Submit Update Request" என்பதை கிளிக் செய்யவும்.
அதன் பிறகு உங்களுக்கு ஒரு கன்பர்மேஷன் செய்தியும் Unique Update Reference Number (URN) -ம் வரும். அதை டவுன்லோட் செய்து சேவ் செய்து கொள்ளவும்.