சுங்கச்சாவடிகளுக்கு கட்டணம் செலுத்த பயன்படும் FASTag கணக்கை நீங்கள் UPI ஆப்கள் மூலம் விரைவாகவும், எளிதாகவும் ரீசார்ஜ் செய்யலாம்.
இதில் கூகுள் பே செயலி மூலம் FASTag ரீசார்ஜ் செய்வது எப்படி என்பதை காணலாம்.
முதலில் கூகுள் பே செயலியை திறக்கவும். அதில் ஸ்க்ரால் செய்து Bills, Recharge And More என்ற பிரிவு வரை செல்லவும்.
அதில் FASTag recharge ஆப்ஷனை கிளிக் செய்யவும்.
அதில் உங்கள் வாகனத்தை பதிவு செய்த FASTag வங்கியை தேர்வு செய்யவும்.
பின்னர் உங்கள் வண்டி பதிவு எண்ணை உள்ளிடவும். அதில் உங்கள் FASTag கணக்கின் இருப்பு காட்டப்படும்.
அதில் ரீசார்ஜ் செய்ய உங்களுக்கு ஏற்ற பண பரிவர்த்தனை முறையை தேர்வு செய்து, செயல்முறையை முடித்துக்கொள்ளலாம்.