பான் கார்டில் திருத்தங்களை எளிமையாக செய்வது எப்படி
முதலில் NSDL இணையதளமான https://www.onlineservices.nsdl.com/paam/endUserRegisterContact.html என்பதை பார்க்க வேண்டும்.
அப்ளிகேஷன் டைப் ஆப்ஷனில் ’Change or Correction in PAN Data’ என்பதைத் தேர்வு செய்ய வேண்டும்.
‘Category Type’ என்பதை தேர்வு செய்து அதில் தனிப்பட்ட விருப்பத்தை தேர்வு செய்ய வேண்டும்.
தேவையான விவரங்களை கொடுக்க வேண்டும். பின் கேப்ட்சா குறியீட்டை உள்ளிட்டு சமர்ப்பிக்க வேண்டும்.
KYC விருப்பத்தைத் தேர்ந்தெடுத்து, பின் புகைப்படம் அல்லது கையொப்பம் இல்லாமல் தந்தை அல்லது தாயின் விவரங்களை உள்ளிட வேண்டும்.
’Next for PAN Card Signature Change or Photo Update’ என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.
ஐடி, முகவரி மற்றும் பிறந்த தேதிக்கான ஆதாரத்தை இணைக்கும்படி கேட்க, அதனை இணைக்க வேண்டும்.
பின் செக்பாக்ஸை டிக் செய்து ’Submit’ பட்டனை கிளிக் செய்ய வேண்டும்.
பணம் செலுத்தும் ஆப்சன் வரும், அதில் உங்கள் புகைப்படம் மற்றும் கையொப்பத்தை பான் கார்டில் மாற்றுவதற்கு ரூ.101 (ஜிஎஸ்டி உட்பட) செலுத்த வேண்டும்.
நிர்ணயிக்கப்பட்ட தொகையைச் செலுத்திய பிறகு, குறிப்பிட்ட செயல்முறையின் ஒப்புதலுக்காக 15 இலக்க எண் வரும்.
விண்ணப்பம் பதிவிறக்கம் செய்யப்பட்டு பான் சேவா பிரிவுக்கு அனுப்ப வேண்டும்.