பைக் மைலேஜ் அதிகரிக்க என்ன செய்யலாம் ?

S.Karthikeyan
Jan 05,2024
';


மைலேஜ் மிகவும் அவசியமான ஒன்று. அவற்றை சாதாரணமாக எந்தவொரு மோட்டார்சைக்கிள் மற்றும் கார் ஓட்டுநர்களும் ஒதுக்கிவிட முடியாது.

';


உங்கள் வாகனம் தொடர்ந்து அதிக மைலேஜ் கொடுக்க வேண்டும் என விரும்பினால் சில அடிப்படை விஷயங்களை கடைபிடிக்க வேண்டும்

';


முறையான கால இடைவெளியில் தயாரிப்பாளரின் பரிந்துரையின் படி இஞ்ஜின் ஆயில் மாற்ற வேண்டும்.

';


தரமற்ற என்ஜின் ஆயில் அல்லது தயாரிப்பாளர் பரிந்துரைக்காத ஆயிலை பயன்படுத்தவே கூடாது

';


டயரில் முறையான காற்று அழுத்ததை முறையாக கடைப்பிடிக்காமல் இருப்பது மைலேஜ் குறைய முக்கிய காரணமாகும். அதிகமான காற்று இருப்பதும் தவறு

';


பைக்கில் மணிக்கு 60 கிமீ வேகத்திற்கு மேல் பயன்படுத்துவனை பெரும்பாலும் தவிர்க்க வேண்டும். சுமார் மணிக்கு 40 கிமீ வேகத்திலிருந்து 60 கிமீ வேகத்திற்குள் பயன்படுத்தினால் சிறப்பான மைலேஜ் பெறலாம்.

';


என்ஜினுக்கு தேவையான காற்று மற்றும் எரிபொருளை கொண்டு செல்லும் கார்புரேட்டரை சரியாக வைத்து கொள்ளுவது அவசியம்.

';


அதிவேகத்தில் சென்று திடீரென பிரேக் பிடிப்பதனால் எரிபொருள் இழப்பு மிகுதியாக இருக்கும். எனவே தேவையற்ற வேகத்தை தவிர்த்தால் பிரேக்கிங் திறன் கூடும், எனவே மைலேஜ் அதிகரிக்கும்

';


அதிகமாக குறைந்த கியரில் இயக்கினால் மைலேஜ் குறையும் எனவே முடிந்த வரை. டாப் கியரில் பயணம் செய்தால் சிறப்பான மைலேஜ் கிடைக்கும்.

';

VIEW ALL

Read Next Story