ஆன்லைனில் பட்டா வாங்குவது எப்படி
முதலில் https://eservices.tn.gov.in/eservicesnew/index.html என்ற அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
'பட்டா மாறுதல் விண்ணப்பிக்க' அதில் என உள்ள ஐகான்/லிங்கை க்ளிக் செய்ய வேண்டும்.
பின்னர் அது https://tamilnilam.tn.gov.in/citizen/ தளத்திற்கு போகும்.
அதில் நீங்கள் உங்கள் மொபைல் எண்ணை கொடுக்க வேண்டும். அந்த எண்ணுக்கு எஸ்எம்ஸ் மூலம் OTP வரும்.
அதை கொடுத்து லாக்-இன் செய்ய வேண்டும். அதில் பயனர் பெயர், பெற்றோர், மின்னஞ்சல் முகவரி, பிறந்த தேதி, பாலினம், முகவரி உள்ளிட்ட விவரங்களைக் கொடுக்க வேண்டும்.
அதன் பின்னர் நீங்கள் வாங்கிய வீடு எந்த மாவட்டம், வட்டம், கிராமம், சார்பதிவாளர் அலுவலகம், ஆவணம் பதிவு செய்யப்பட்ட தேதி, ஆவணப் பதிவு எண், புல எண், உட்பிரிவு எண் போன்றவற்றை நில விவரங்களாக நீங்கள் கொடுக்க வேண்டும்.
பின்னர் தானப்பத்திரம், கிரையப் பத்திரம், பாகப்பிரிவினை பத்திரம் போன்ற ஏதாவது ஒரு சொத்து பத்திரம், விண்ணப்பதாரரின் அடையாள சான்றை ஆன்லைனில் அப்லோட் செய்ய வேண்டும்.
பின்னர், விண்ணப்பிப்பதற்கான கட்டணத்தை இணையவழியில் செலுத்த வேண்டும்.
கட்டணம் செலுத்திய பிறகு விண்ணப்பதாரரின் மொபைல் எண்ணுக்கு, எஸ்எம்எஸ் ஒன்று மொபைலுக்கு வரும்.