ஆதார் கார்டில் போட்டோ மாற்றுவது எப்படி
ஆதார் அட்டையில் உள்ள புகைப்படத்தை எளிதாக எப்படி மாற்றலாம் என்பதற்கான வழிமுறைகளை இங்கு பார்க்கலாம்...
முதலில் UIDAI (https://uidai.gov.in/) அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்திற்குச் செல்ல வேண்டும்.
அடுத்து அந்த இணையதளப் பக்கத்தில் Aadhaar Update எனும் விருப்பத்தை கிளிக் செய்ய வேண்டும்.
பின்பு ஆதார் பதிவு படிவத்தைப் பதிவிறக்கம் செய்து தேவையான விவரங்களை நிரப்பவும்.
அடுத்து அருகில் இருக்கும் ஆதார் பதிவு மையத்தில் அந்த படிவத்தைச் சமர்ப்பிக்க வேண்டும்.
அங்கு இருக்கும் ஆதார் ஊழியர் அனைத்து விவரங்களையும் பயோமெட்ரிக் மூலம் சரிபார்ப்பார்.
அதன்பிறகு உங்களது ஆதார் அட்டையில் புதுப்பிக்கப்படும் புதிய புகைப்படத்தை பணியாளர் எடுத்துக்கொள்வார்.
பிறகு ஆதார் ஊழியர் உங்களுக்கு ஒப்புகை சீட்டு மற்றும் புதுப்பிப்பு கோரிக்கை எண்ணை (URN) வழங்குவார்.
பின்பு உங்கள் புகைப்படம் 90 நாட்களுக்குள் புதுப்பிக்கப்படும்.
ஆதார் அட்டை புதுப்பிப்பதற்கான உங்கள் விண்ணப்பத்தின் நிலை என்ன என்பதை ஆன்லைனில் கண்காணிக்கலாம்.
UIDAI இன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் URN எண்ணைப் பயன்படுத்தி புதிய ஆதார் அட்டையின் நிலையைக் கண்காணிக்கலாம்.