1 ரூபாய்க்கு டிஜிட்டல் கோல்டு வாங்குவது எப்படி?

S.Karthikeyan
Nov 12,2023
';


நீங்கள் தங்கம் வாங்கத் திட்டமிட்டிருந்தால், நகைக் கடைக்குச் செல்லவேண்டிய அவசியமில்லை. ஆன்லைனில் வாங்கலாம்

';


ஒரு ரூபாய், 100 ரூபாய்க்கு நீங்கள் ஆன்லைனில் தங்கம் வாங்கிக் கொள்ள முடியும்

';


Paytm பயனர்கள் ஆன்லைனில் ஒரு ரூபாய் முதல் ரூ.1,99,000 வரையிலும் தங்கத்தை வாங்கலாம். இந்தச் சேவை MMTC-PAMP மூலம் நிர்வகிக்கப்படுகிறது.

';


www.paytm.com/digitalgold என்ற இணையதளத்தைப் பார்வையிடவும். Paytm செயலியில் 'gold' எனத் தேடவும்.

';


Google Pay செயலியில் பிரத்யேக தங்க லாக்கர் பிரிவு இருக்கிறது. இதன் மூலம் டிஜிட்டல் தங்கத்தை வாங்கவும் விற்கவும் முடியும்.

';


டாடாவின் தனிஷ்க், சேஃப் கோல்ட் (SafeGold) உடன் இணைந்து தங்கத்தை வாங்க, விற்க உதவுகிறது. இதில், டிஜிட்டல் தங்கத்தை 100 ரூபாய்க்கு வாங்கலாம். இதுபற்றி மேலும் அறிய https://www.tanishq.co.in/digigold/buy ஐப் பார்வையிடலாம்.

';


PhonePe மொபைல் அப்ளிகேஷன் மூலமும் டிஜிட்டல் தங்கத்தை வாங்க முடியும். இதன் மூலம் டிஜிட்டல் தங்கத்தை 10 ரூபாய் முதல் வாங்கலாம்.

';


ஏர்டெல் பேமெண்ட்ஸ் வங்கியும் சேஃப்கோல்டு (SafeGold) உடன் இணைந்து DigiGold சேவையைக் கொடுக்கிறது. ஏர்டெல் பேமெண்ட்ஸ் வங்கியில் சேமிப்புக் கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்கள் ஏர்டெல் தேங்கஸ் செயலி மூலம் டிஜிட்டல் தங்கத்தில் முதலீடு செய்யலாம்.

';


பாரத் பே (BharatPe) பேமெண்ட் அப்ளிகேஷன் சேஃப் கோல்டு (SafeGold) உடன் இணைந்து டிஜிட்டல் தங்கத்தை வாங்கும் ஆப்ஷனை வழங்கிவருகிறது.

';


பாரத் பே செயலி மூலம் தங்கத்தை வெறும் 1 ரூபாய்க்கும் வாங்கலாம்.

';


டாடா குழுமத்திற்கு சொந்தமான பிக் பாஸ்கெட் (Big Basket) செயலிலும் தனிஷ்க் தங்க நாணயங்களை வாங்குவதற்கான தந்தேராஸ் ஸ்டோர் ((Dhanteras Store) உள்ளது.

';


ஆன்லைன் ஃபேஷன் தளமான மைந்த்ரா (Myntra), மளிகைப் பொருட்கள் விற்பனை செய்யும் Zepto, உணவு டெலிவரி நிறுவனமான ஜோமேட்டோ(Zomato) வுக்குச் சொந்தமான Blinkit போன்ற இன்னும் பல தளங்கள் மூலமும் டிஜிட்டல் தங்கம் மற்றும் தங்க நாணயங்களை வாங்க முடியும்.

';

VIEW ALL

Read Next Story