பிஎஸ்என்எல்: 4ஜிபி டேட்டா இலவசம்..! பெறுவது எப்படி?
தீபாவளியையொட்டி BSNL நிறுவனம் பல்வேறு ஆஃபர்களை வழங்கி வருகிறது.
ஒரு சில ரீசார்ஜ் திட்டங்களுக்கு 3 ஜிபி டேட்டா இலவம் என்று பிஎஸ்என்எல் நிறுவனம் அறிவித்திருந்தது.
இந்த நிலையில் ஒரு புதிய சலுகையை BSNL நிறுவனம் வழங்கி உள்ளது.
அதன்படி தங்கள் பழைய சிம்மை 4ஜி தரத்திற்கு மேம்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு 4 ஜிபி டேட்டா இலவசம் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
எனினும் இந்த திட்டம் ஆந்திர பிரதேச வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே பொருந்தும்
4ஜி சிம்-க்கு மேம்படுத்தப்பட்டதும், வாடிக்கையாளர்கள் தங்கள் பகுதியில் , BSNL-ன் அதிவேக நெட்வொர்க்கில் இந்தத் தரவை அனுபவிக்க முடியும்.
4ஜி சிம்மிற்கு மேம்படுத்த வாடிக்கையாளர்கள் தங்களுக்கு அருகிலுள்ள BSNL வாடிக்கையாளர் சேவை மையத்துக்கு செல்ல வேண்டும்
ஆந்திரப்பிரதேச BSNL பயனர்கள் தங்கள் சிம் கார்டு வகையைச் சரிபார்க்க 54040 என்ற எண்ணிற்கு 'SIM' என்ற செய்தியுடன் SMS அனுப்பலாம்.
வாடிக்கையாளர்கள் 3G ஐக் குறிக்கும் பதில் SMS ஐப் பெற்றால், அவர்கள்ள் தங்கள் சிம்மை 4G க்கு இலவசமாக மேம்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.