டிவி சேனல்கள் எல்லாம் இனி இலவசம்..!
இன்டர்நெட் டேட்டா ஏதும் இல்லாமல் மொபைல் போனிலேயே டிவி சேனல்களை நேரடியாக பார்ப்பதற்கான வசதிகளை கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை
கடும் எதிர்ப்பு எழுந்தாலும், இந்த சேவையை அரசு நிறைவேற்ற அதிக ஆர்வம் காட்டி வருவதாக தகவல்
‘இன்டர்நெட் டேட்டா’ தகவல் தொழில்நுட்ப உலகில் முக்கிய பங்காற்றி வருகிறது. இதன் மூலம் இந்தியாவில் உள்ள சுமார் 80 கோடி ஸ்மார்ட் ஃபோன் பயன்பாட்டாளர்கள் சமூக வலைதளங்கள், யூடியூப் உள்ளிட்டவற்றை பயன்படுத்துகின்றனர்.
இதனை கருத்தில் கொண்டு இன்டர்நெட் டேட்டா ஏதும் இன்றி, மொபைல் போனிலேயே டிவி சேனல்களை நேரலையாக பார்க்கும் வசதியை கொண்டு வர மத்திய அரசு ஆர்வம்
இந்த சேவையை D2M (Direct to Mobile) என்று அழைக்கிறார்கள். அதாவது வீட்டிற்கு வீடு டிடிஎச் சேவை Direct to Home இருப்பதை, அங்குள்ளவர்கள் தங்கள் மொபைலிலும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இதற்காக தனி கட்டணம் ஏதும் செலுத்த தேவையிருக்காது. இதன் மூலம் நிகழ்ச்சிகளை தரமாக வழங்குவோருக்கு ரசிகர்கள் எண்ணிக்கை அதிகரிப்பதற்கான வாய்ப்பு ஏற்படும்.
அதே நேரம் இன்டர் நெட் டேட்டா குறைவாக பயன்படுத்தப்படும்போது அதனால் டெலிகாம் நிறுவனங்களுக்கு ஓரளவு இழப்பு ஏற்படலாம்.
மேலும் டெலிகாம் நிறுவனங்கள் அடுத்ததாக 5ஜி சேவைகளை கொண்டு வருவதற்கு ஆயத்தம் ஆகி வருகின்றன.
இந்த 5 ஜி சேவைகளையும் டி2எம் பாதிக்கக்கூடும் என்று கருதப்படுகிறது. இருப்பினும், நிகழ்ச்சிகளுக்கான பார்வையாளர்களை அதிகரிக்கும் வகையில் இந்த டி2எம் சேவையை நடைமுறைப்படுத்த மத்திய அரசு ஆர்வம்
இதன் அடுத்த கட்ட நகர்வு குறித்து விவாதிக்க மத்திய அரசு உயர் அதிகாரிகள், ஐஐடி கான்பூர் பேராசிரியர்கள், டெலிகாம் நிறுவன உயர் அதிகாரிகள் பங்கேற்கும் கூட்டம் அடுத்த வாரம் நடைபெறவுள்ளது.