BSNL புதிய 4G டவர்களுடன் தேவையான மேம்படுத்தல்களை முடித்துவிட்டு, இப்போது 5G சேவைகளை தொடங்க திட்டமிட்டுள்ளது
4G சிம்மை ஆன்லைனில் 10 நிமிடங்களில் ஆர்டர் செய்யலாம். ஜியோ, ஏர்டெல் நிறுவனங்களுடன் போட்டி போட தயாராகிவிட்ட பிஎஸ்என்எல் சிம் புக்கிங் செய்ய சுலப வழிமுறை
உங்கள் தொலைபேசி அல்லது மடிக்கணினியில் இணையம் சரியாக இயங்குவதை உறுதி செய்துக் கொண்ட பிறகு ஆர்டர் செய்யும் செயல்முறையைத் தொடங்குங்கள்
தொலைபேசி அல்லது மடிக்கணினியின் உலாவிக்குச் சென்று https://prune.co.in/ என்ற இணையதளத்தைத் திறக்கவும்
இணையதளத்தில் பை சிம் கார்டு (Buy SIM Card) என்ற விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்
அடுத்தபடியாக எந்த நாட்டில் இருந்து விண்ணப்பிக்கிறீர்கள் என்பதைக் குறிக்கும் "Country" என்ற தெரிவில் இந்தியாவைத் தேர்ந்தெடுக்கவும். அதன்பிறகு நெட்வொர்க் ஆபரேட்டர் (Network Operator) என்பதில் BSNL ஐத் தேர்ந்தெடுக்கவும்
வலதுபுறத்தில் காட்டப்பட்டுள்ள விருப்பங்களிலிருந்து நீங்கள் விரும்பும் FRC திட்டத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
முழுப் பெயர், மொபைல் எண், OTP (உங்கள் மொபைலில் வரும்), மின்னஞ்சல் முகவரி மற்றும் டெலிவரி முகவரி என தேவையான விவரங்களை நிரப்பவும்