மோசடி, ஸ்பேம் அழைப்புகளை ஒரே மெசேஜில் தடுப்பது எப்படி?
ஸ்பேம் அழைப்புகளால் ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.
இதில், வாடிக்கையாளர்களுக்கு மிகவும் எரிச்சலூட்டும் விஷயம், சில அவசர வேலைகளைச் செய்யும்போது வரும் அழைப்புகள்.
தங்களுக்கு கடன் வேண்டுமா அல்லது சலுகையில் பொருட்கள் வேண்டுமா என கேட்பார்கள்.
வாடிக்கையாளர்கள் எவ்வளவு தவிர்க்க முயன்றாலும் இந்த அழைப்புகள் வந்து கொண்டே இருக்கின்றன.
இதில் வாடிக்கையாளர்களின் ஒரே வழி, அத்தகைய எண்களைத் தடுப்பதுதான். அப்படி செய்தாலும் வேறு எண்களில் இருந்து அழைப்புகள் வருகின்றன.
இந்த வகையான ஸ்பேம் அழைப்புகளைத் தடுக்க வாடிக்கையாளர்களுக்கு சிறந்த வழி உள்ளது. இது டிஎன்டி அம்சம்.
இந்த விருப்பத்தை நீங்கள் செயல்படுத்தினால், இதுபோன்ற ஸ்பேம் அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ் தொல்லைகளை குறைக்கலாம்.
1909 என்ற எண்ணுக்கு ஆங்கில பெரிய எழுத்தில் FULLY BLOCK என டைப் செய்து மெசேஜ் அனுப்பவும்.
இதைச் செய்வதன் மூலம், உங்கள் தொலைபேசியில் DND விருப்பம் விரைவில் செயல்படுத்தப்படும்.
அப்போது இந்த எண்ணுக்கு வரும் ஸ்பேம் அழைப்புகளின் எண்ணிக்கையும் குறையும்.
நீங்கள் இரட்டை சிம் பயன்படுத்துபவராக இருந்தால், இரண்டு சிம்களில் இருந்தும் இதைச் செய்ய வேண்டும்.
இல்லையெனில் சிம்மில் ஸ்பேம் அழைப்புகள் வந்து கொண்டே இருக்கும்.
ட்ரு காலர் செயலி பயன்படுத்தலாம். ஆனால் உங்களின் பிரைவசிக்கு பாதுகாப்பில்லை