மலிவான 5G JioPhone; பல அற்பதமான அம்சங்களுடன் விரைவில் அறிமுகம்

Reliance Jio மீண்டும் களமிறங்கவுள்ளது. அதன் மலிவான JioPhone Next அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, தற்போது மலிவான JioPhone ஐக் லாஞ்ச் செய்ய தயாராகி வருகிறது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 26, 2022, 09:04 AM IST
  • Jio தனது மலிவான 5G போனை இந்த ஆண்டு அறிமுகப்படுத்தலாம்.
  • JioPhone 5G ஜூன் மாதம் அறிமுகமாகலாம்.
  • JioPhone 5G 6.5 இன்ச் டிஸ்ப்ளே கொண்டிருக்கும்.
மலிவான 5G JioPhone; பல அற்பதமான அம்சங்களுடன் விரைவில் அறிமுகம் title=

புதுடெல்லி: இந்திய தொலைத்தொடர்பு நிறுவனமான ஜியோ 2021 அக்டோபரில் JioPhone Next ஐ அறிமுகப்படுத்தியது. நாட்டின் உயர்மட்ட நகரங்களுக்கான 5G கவரேஜ் திட்டங்களை நிறுவனம் சமீபத்தில் நிறைவு செய்துள்ளது. இந்த 5ஜி சேவைகள் ஜூன் மாதம் நடைபெறும் வருடாந்திர பங்குதாரர் கூட்டத்தில் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில், JioPhone 5G அறிமுகமாகலாம்.

JioPhone 5G Specifications
JioPhone 5G ஆனது (Jio Phone) HD+ (1600 x 720 பிக்சல்கள்) ரெசல்யூசன் கொண்ட 6.5-இன்ச் IPS LCD டிஸ்ப்ளேவுடன் வரும் என்று கூறப்படுகிறது. ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் இரட்டை கேமரா அமைப்பு இருக்கும். இதில் 13MP முதன்மை லென்ஸ் இருக்கும். இரண்டாம் நிலை லென்ஸ் 2MP மேக்ரோ சென்சார் இருக்கும். முன்புறத்தில், இது 8MP செல்ஃபி கேமராவைக் கொண்டிருக்கும்.

ALSO READ | மிகக்குறைந்த விலையில் கிடைக்கிறது JioPhone Next: வாங்க அலை மோதும் மக்கள் 

JioPhone 5G Battery
ஹூட்டின் கீழ், JioPhone 5G ஆனது 8nm Qualcomm Snapdragon 480 5G சிப்செட் மூலம் 4GB RAM மற்றும் 32GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. சாதனம் 5,000mAh நீக்க முடியாத பேட்டரியை பேக் செய்யும் மற்றும் 18W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவை ஆதரிக்கும். பாதுகாப்பிற்காக, சாதனத்தில் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனர் இருக்கும்.

JioPhone 5G Other Features
5G இணைப்பைப் பொறுத்தவரை, தொலைபேசியில் ஐந்து 5G பேண்டுகள் இருக்கும் - N3, N5, N28, N40 மற்றும் N78. இது இரண்டு சிம்கள் மற்றும் மைக்ரோ எஸ்டியை வைத்திருக்க மூன்று ஸ்லாட்டைக் கொண்டிருக்கும்.

JioPhone 5G Full Specifications
- 6.5 இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளே
- HD+ (1600 x 720 பிக்சல்கள்) ரெசல்யூசன் 
- 13MP + 2MP இரட்டை கேமரா, 8MP செல்ஃபி கேமரா
- ஸ்னாப்டிராகன் 480 SoC
- 5,000mAh பேட்டரி, 18W FC
- பக்கவாட்டு கைரேகை ஸ்கேனர்

ALSO READ | Jio-வின் அடுத்த புரட்சி: உலகின் மிக மலிவான ஸ்மார்ட்போன் JioPhone Next அறிமுகம்!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News