தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் (DoTE) தமிழ்நாடு பொறியியல் சேர்க்கைக்கான (TNEA) தரவரிசைப் பட்டியலை 2023 இன்று வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் பொறியியல் கல்லூரிகளுக்கான கலந்தாய்வுக்கு ஒரு லட்சத்து 87 ஆயிரத்து 693 மாணவ-மாணவிகள் விண்ணப்பித்திருந்தனர். இந்த நிலையில், அவர்களுக்கான தரவரிசை பட்டியல் வெளியாகி உள்ளது.
உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தரவரிசை பட்டியலை வெளியிட்டார்.
மாணவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான tneaonline.org இல் தரவரிசைப் பட்டியலை சரிபார்த்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
பதிவிறக்கம் செய்ய, முதலில் மாணவர்கள் tneaonline.org என்ற இணையதளத்துக்கு செல்ல வேண்டும்.
அதன் பிறகு வலது புறம் உள்ள லாக் இன் பட்டனை கிளிக் செய்து உங்கள் லாக் இன் தகவல்களை நிரப்ப வேண்டும்.
அதன் பிறகு TNEA தரவரிசைப் பட்டியல் உங்கள் திரையில் தோன்றும். இதை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.
தமிழ்நாட்டில் உள்ள 440-க்கும் மேற்பட்ட என்ஜினியரிங் கல்லூரிகளில், பி.இ., பி.டெக். போன்ற என்ஜினீயரிங் படிப்புகளில் சேருவதற்கு கலந்தாய்வு நடத்தப்பட்டு, அதன் மூலமாக மட்டுமே மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது.
தரவரிசைப் பட்டியல் தொடர்பாக ஏதாவது சந்தேகம் இருந்தால், தங்கள் அருகில் உள்ள டி.எஃப்.சி -ஐ ஜூன் 30, 2023 -க்குள் மாணவர்கள் தொடர்பு கொள்ளலாம்.
பொது வகையில் (ஜெனரல் கேடக்ரி) வரும் மாணவர்களின் கலந்தாய்வு ஜூலை 7, 2023 முதல் ஆகஸ்ட் 24, 2023 வரை இருக்கக்கூடும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.