டெல்லியில் பிரதமர் மோடி 3வது முறையாக இன்று பதவி ஏற்க உள்ளார்.
இந்த விழாவில் கலந்து கொள்ள நடிகர் ரஜினிகாந்த் சென்னையில் இருந்து டெல்லி புறப்பட்டார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், பிரதமர் மோடி மூன்றாவது முறையாக பிரதமராக பதவி ஏற்க உள்ளார்.
இது ஒரு சாதனை.. அவருக்கு பாராட்டுக்கள்.. மக்கள் இந்த நாடாளுமன்ற தேர்தலில் ஒரு வலுவான எதிர்க்கட்சியை தேர்வு செய்துள்ளனர்.
இது ஜனநாயகத்திற்கு ஒரு ஆரோக்கியமான அறிகுறி.
அடுத்த 5 ஆண்டுகள் நல்ல ஆட்சியாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறேன்.
மாநில கட்சியாக அங்கீகாரம் பெற்றுள்ள திருமாவளவன் மற்றும் சீமானுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் என்று கூறினார்.