தமிழ்நாட்டில் பாஜக எத்தனை விழுக்காடு வாக்குகள் வாங்கும்?
நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரம் தமிழ்நாட்டில் சூடுபிடித்துள்ளது.
திமுக, அதிமுக அணிகளுக்கு மாற்றாக பாஜக தலைமையில் ஒரு கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது.
பாஜகவின் தமிழ்நாடு மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய இணையமைச்சர் எல் முருகன், முன்னாள் கவர்னர் தமிழிசை ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
இம்முறை பாஜக இரட்டை இலக்கத்தில் தமிழ்நாட்டில் வாக்கு வங்கியை பெறும் என பாஜகவினர் கூறுகின்றனர்.
இதற்கு விளக்கம் அளித்த திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ ராசா, கடந்த முறை 3 விழுக்காடு வாக்குகளை மட்டுமே அக்கட்சி பெற்றதாக தெரிவித்துள்ளார்.
எப்படி பார்த்தாலும் 6 விழுக்காடுக்கும் மேல் தமிழ்நாட்டில் பாஜக பெற வாய்ப்பில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.