நீட் தேர்வு குறித்து மத்திய அரசு ஆலோசிக்க வேண்டும்: டிடிவி

Last Updated : Sep 2, 2017, 07:14 PM IST
நீட் தேர்வு குறித்து மத்திய அரசு ஆலோசிக்க வேண்டும்: டிடிவி title=

மத்திய அரசு நீட் தேர்வினை தமிழகத்தில் நீக்குதல் தொடர்பாக ஆலோசிக்க வேண்டும் அல்லது நீட் தேர்வினை 12 வகுப்பு பாடத்திட்டத்தின் அடிப்படையில் நடத்த வழிவகுக்க வேண்டும் என டிடிவி. தினகரன் தெரிவித்துள்ளார்.

 

 

அரியலூர் குழுமூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அனிதா. ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த இவர் 12 ஆம் வகுப்பில் 1,176 எடுத்துள்ளார். இவரது மருத்துவ 'கட்ஆப்' 196.75 பெற்றார். எனினும் நீட் தேர்வில் இவரால் 700க்கு 86 மதிப்பெண்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

நீட் தேர்வின் அடிப்படையில் மருத்துவ கலந்தாய்வு நடந்தால் இவருக்கு மருத்துவம் படிக்கும் வாய்ப்பு கிடைக்காமல் போனது. இதனால் மனமுடைந்த அனித்தா நேற்று தனது வீட்டினில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இன்று அவரது உடலுக்கு தமிழக தலைவர்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் அனித்தாவிற்கு அஞ்சலி செலுத்த அரியலூர் வந்த டிடிவி. தினகரன் செய்தியாளர்களிடம் இவ்வாறு தெரிவித்தார்.

Trending News