வீட்டில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்த முதியவர் கைது!

வீட்டில் சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்து வந்த முதியவரை போலீசார் கைது செய்தனர்.   

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 21, 2022, 12:33 PM IST
  • தற்போது கள்ளச்சாராயம் காய்ச்சும் நபர்களின் எண்ணிக்கை அதிகமாகி உள்ளது.
  • போலீசார் தனிப்படை அமைத்து தீவிர சாராய வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
வீட்டில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்த முதியவர் கைது!  title=

தற்போது கொரோனா காரணமாக தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு (Tamilnadu Lockdown) மற்றும் ஞாயிற்றுக்கிழமை வருடங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன.  இந்த சமயத்தில் மதுபான கடைகளும் மூடப்பட்டன, இதனால் தற்போது கள்ளச்சாராயம் காய்ச்சும் நபர்களின் எண்ணிக்கை அதிகமாகி உள்ளது. சேலம் (Salem District) மாவட்டம் கல்வராயன் மலை  வனப்பகுதியில் சட்டவிரோதமாக கள்ளச்சாரயம் காய்ச்சப்பட்டு அங்கிருந்து லாரி டியூப்கள் மூலம் கடத்தி வந்து ஆத்தூர், கெங்கவல்லி, தலைவாசல் உள்ளிட்ட பகுதிகளில் விற்பனை செய்யப்பட்டு வருவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு புகார் சென்றது. 

ALSO READ | கோவையில் தொடரும் கஞ்சா வேட்டை 

அதன்பேரில் போலீசார் தனிப்படை அமைத்து தீவிர சாராய வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை தொடர்ந்து ஆத்தூர் அருகே கல்பகனூர் , கொத்தாம்பாடி  சுற்றுவட் டார பகுதிகளில் கள்ளச் சாராயம் காய்ச்சி சிலர் விற்பனை  செய்வதாக ஆத்தூர் டிஎஸ்பி, ராமச் சந்திரனுக்கு  ரகசிய  தகவல் கிடைத்தது. 

liquor

இதனையடுத்து ஆத்தூர்  ஊரக போலீசார்  கல்பகனூர் , கொத்தாம்பாடி ஆகிய பகுதியில்  சாராய  வேட்டையில்  ஈடுபட்டனர் . அப்போது கல்பகனூரில்  வீட்டில் ஊறல் போட்டு சாராயம் காய்ச்சிய  மணி (66) என்பவரை கைது செய்த போலீசார், அவரது  வீட்டில் விற்பனைக்கு  வைத்திருந்த 120 லிட்டர் கள்ளச்சாராயத்தை  பறிமுதல் செய்து அழித்தனர்.

liquor

ALSO READ | சிறைச்சாலையில் செல்போன்: கைதிகளுக்கு அதிகாரிகளே உதவினார்களா? 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News