கோவை அரசு மருத்துவமையில் ரத்தம் ஏற்றியதால் 2 வயது பெண் குழந்தைக்கு HIV பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக புகார் அளித்துள்ளனர்.
திருப்பூரில் தங்கி நெசவு வேலை செய்து வந்த விஸ்வநாதன் தம்பதியின் 2 வயது குழந்தைக்கு HIV ரத்தம் ஏற்றப்பட்ட விவகாரம் தற்போது அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. குழந்தையின் பெற்றோர்கள் இருவருக்கும் HIV பாதிப்பு இல்லை என்பது மருத்துவ பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து குழந்தையின் பெற்றோர்கள் கூறுகையில்,,
கோவை அரசு மருத்துவமனையில், இருதய நோய் பாதிக்கப்பட்ட 2 வயது குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், மீண்டும் குழந்தைக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டு, கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. அப்போது, குழந்தைக்கு எச்.ஐ.வி பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது.
கோவை அரசு மருத்துவமனை தவிர வேறு எங்கும் குழந்தையை சிகிச்சைக்காக அழைத்துச் செல்லவில்லை. அந்த ரத்தத்தின் மூலம் என் குழந்தைக்கு HIV ஏற்ப்பட்டிருப்பதாக தெரிவித்தனர்.
இதற்கிடையில், மருத்துவமனை நிர்வாகம், இந்த குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்துள்ளது. இந்நிலையில், சிபிசிஐடி விசாரணை தேவை என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.