விராட் கோலி இந்தியா, ஆசியா லெவன், இந்தியா ஏ, இந்தியா ரெட், நார்த் சோன், ரெஸ்ட் ஆஃப் இந்தியா, ஆர்சிபி, இந்தியா அண்டர்-19 மற்றும் டெல்லி ஆகிய அணிகளுக்கு விளையாடி உள்ளார்.
2008ம் ஆண்டு மலேசியாவில் நடந்த 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையை இந்தியாவிற்காக வென்றுள்ளார்.
ஐபிஎல் தொடங்கிய 2008ம் ஆண்டு முதல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடி வருகிறார்.
ஒருநாள் கிரிக்கெட்டில் 5-0 என ஒயிட்வாஷ் செய்த முதல் இந்திய கேப்டன் என்ற பெருமையை பெற்றுள்ளார் கோலி.
2014ல் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக பொறுப்பேற்று கொண்டார் விராட் கோலி.
2016ம் ஆண்டு மட்டும் கோலி 7 சதங்கள் மற்றும் 13 அரை சதங்கள் அடித்து சாதனை படைத்துள்ளார்.
நான்கு டெஸ்ட் தொடர்களில் இரட்டை சதம் அடித்த முதல் பேட்ஸ்மேன் என்ற பெருமையை பெற்றார்.
ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 205வது இன்னிங்சில் 10,000 ரன்களை கடந்து சாதனை படைத்துள்ளார்.
சமீபத்தில் டைம்ஸ் ஸ்கொயரில் அவரது முழு உருவ சிலை திறக்கப்பட்டது.