2024 ஜூன் மாதம் நடைபெறும் இந்த தொடரில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்க உள்ளது.
ஆசியா, ஆப்பிரிக்கா, அமெரிக்கா, கிழக்காசிய பசிபிக் நாடுகள், ஐரோப்பா ஆகிய பகுதிகளை சேர்ந்த 20 அணிகள் பங்கேற்க உள்ளது.
USA மற்றும் மேற்கு இந்திய தீவுகள் தொடரை நடத்துவதால் முதலிரண்டு அணிகளாக அவை தேர்வாகின.
ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, இந்தியா, நெதர்லாந்து, இலங்கை உள்ளிட்ட 8 அணிகள் கடந்த டி20 உலகக் கோப்பை முதல் 8 இடங்களை பிடித்து, நேரடி தகுதி.
ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசம் தரவரிசையின்படி தகுதிபெற்றனர்.
அமெரிக்க குவாலிபயர் மூலம் கனடா தேர்வானது.
ஐரோப்பா குவாலிஃபயர்ஸ் மூலம் ஸ்காட்லாந்து, அயர்லாந்து அணிகள் தகுதிபெற்றன.
ஆசிய பசிபிக் குவாலிஃபயர்ஸ் மூலம் நேபாளம் மற்றும் ஓமன் நாடுகள் தகுதிபெற்றன.
கிழக்காசிய பசிபிக் குவாலிஃபயர்ஸ் மூலம் பப்புவா நியூ கினியா நாடு தேர்வானது.
நமீபியா மற்றும் உகாண்டா அணிகள் தேர்வாகி உள்ளன.