ஐபிஎல் வரலாற்றில் ஒரு இன்னிங்ஸில் அதிக விக்கெட் எடுத்த டாப் 5 பவுலர்கள்!

Mar 21,2024
';

அல்சாரி ஜோசப் – 6/12:

2019 சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஐபிஎல் வரலாற்றில் சிறந்த பந்துவீச்சை பதிவு செய்தார். சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராக 3.4 ஓவரில் ஒரு மெய்டன் உட்பட 12 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

';

சோஹைல் தன்வீர் – 6/14:

2008 ஆம் ஆண்டில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிய இவர் சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் 14 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

';

ஆடம் ஜம்பா – 6/19:

2016ல் ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் அணிக்காக விளையாடினார். ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில், 19 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

';

அனில் கும்ப்ளே – 5/5:

2009 ஆம் ஆண்டு ஆர்சிபி அணிக்காக களமிறங்கிய கும்பிளே 3.1 ஓவரில் ஐந்து ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

';

ஆகாஷ் மத்வால் – 5/5:

2023 ஐபிஎல் எலிமினேட்டர் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் மத்வால் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸூக்கு எதிராக 3.2 ஓவரில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

';

ஜஸ்பிரித் பும்ரா - 5/10:

மும்பை இந்தியன்ஸ் வீரர் பும்ரா, 2022ல் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் 10 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

';

மோஹித் ஷர்மா – 5/10:

2023 ஐபிஎல்லின் குவாலிஃபையர் இரண்டாவது போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் வீரர் மோஹித் ஷர்மா மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக 10 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

';

இஷாந்த் சர்மா – 5/12:

2011 ஆம் ஆண்டு டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்காக களமிறங்கிய இஷாந்த் கொச்சி டஸ்கர்ஸ் கேரளாவுக்கு எதிராக 12 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றியது.

';

லசித் மலிங்கா – 5/13:

2011 ஆம் ஆண்டு மும்பை அணிக்காக ஆடியபோது மலிங்கா டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் 13 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

';

அங்கித் ராஜ்பூத் – 5/14:

2018 ஆம் ஆண்டு பஞ்சாப் கிங்ஸ் வீரர் அங்கித் ராஜ்பூத், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் 14 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

';

VIEW ALL

Read Next Story