ஒலிம்பிக்கில் வெற்றி பெற்று முதல் மூன்று இடங்களை பிடிப்பவர்களுக்கு முறையே தங்கம், வெள்ளி, வெண்கலம் ஆகிய பதக்கங்கள் வழங்கப்படுகின்றன.
ஜூலை 26ஆம் தேதி தொடங்கிய பாரிஸ் ஒலிம்பிக் தொடர், ஆக. 11ஆம் தேதி நடைபெறுகிறது.
இந்திய அணி இந்த ஒலிம்பிக் தொடரில் மொத்தம் 117 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
இதுவரை இந்த தொடரில் 16 நாடுகள் குறைந்தபட்சம் ஒரு தங்கத்தை வென்றுள்ளது.
இந்த தொடரில் இதுவரை ஜப்பான் அதிகமாக 7 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளன.
தங்கப் பதக்கம் முழுவதுமாக தங்கத்தால் செய்யப்பட்டதில்லை. அதில் வெறும் 6 கிராம் தங்கம் மட்டுமே இருக்கும்.
பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் வழங்கப்படும் தங்கப் பதக்கம் 950 அமெரிக்க டாலர் ஆகும். இந்திய மதிப்பில் 80 ஆயிரம் ரூபாய் ஆகும்.