தோனி சொல்வதை கேட்டால் நீங்களும் வெற்றி பெறலாம்
தோனி எப்படி இருந்தால் வெற்றி பெறலாம் என பல தருணங்களில் கூறியிருக்கிறார்
எந்த விஷயத்தையும் சிம்பிளாக அணுக கற்றுக் கொள்ள வேண்டும் என தோனி சொல்லியிருக்கிறார்
புதுபுது விஷயங்களையும் சூழலையும் ஏற்றுக் கொள்ள எப்போதும் தயாராக இருக்க வேண்டும்
ஒரு விஷயத்தை பல முறை யோசித்து ஒரு முடிவெடுத்தபிறகு அதில் இருந்து பின்வாங்க கூடாது
சில நேரங்களில் உடனடியாக முடிவெடுக்க வேண்டியிருந்தால் முதலில் தோன்றும் எண்ணத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்
வெற்றியோ தோல்வியோ பொறுமையாக கடைசி நொடி வரை நம்பிக்கையோடு முயற்சி செய்ய வேண்டும்
தோல்வி வந்தால் அனுபவம், வெற்றி கிடைத்தால் அடுத்த பயணம் என செல்ல வேண்டும்
எக்காரணத்தைக் கொண்டு பாதியிலேயே தோல்வியை ஒப்புக்கொள்ளவும் கூடாது, விலகவும் கூடாது என்கிறார் தோனி