4 சிக்ஸர்கள், 3 விக்கெட்டுகள்... 5 மாதங்களுக்குப் பிறகு அதிரடியாக மீண்டு வந்த ஹர்திக் பாண்டியா

ஐந்து மாதங்களுக்கு பிறகு இந்திய அணி நிர்வாகத்தையும் மில்லியன் கணக்கான ரசிகர்களையும் மகிழ்வித்த ஹார்திக் பாண்டியா.

Written by - Shiva Murugesan | Last Updated : Feb 28, 2020, 10:33 PM IST
4 சிக்ஸர்கள், 3 விக்கெட்டுகள்... 5 மாதங்களுக்குப் பிறகு அதிரடியாக மீண்டு வந்த ஹர்திக் பாண்டியா title=

புது டெல்லி: ஐந்து மாதங்களுக்கு பிறகு தனது முதல் கிரிக்கெட் போட்டியில் விளையாடிய இந்தியா ஆல்ரவுண்டர் ஹார்திக் பாண்ட்யா (Hardik Pandya), டி.ஒய் பாட்டீல் டி 20 கோப்பை 2020 (DY Patil T20 Cup 2020) இல் ஒரு அற்புதமான ஆட்டதை வெளிப்படுத்தி, நாட்டின் சிறந்த சீம்-பந்துவீச்சு ஆல்ரவுண்டர்களில் (ALL-Rounder) தானும் ஒருவர் தான் என்பதைக் காட்டியுள்ளார். காயத்திலிருந்து மீண்டு வந்த ஹார்திக் பாண்ட்யா பேட் மற்றும் பந்து இரண்டிலும் பிரகாசித்தார். இன்று (வெள்ளிக்கிழமை) பாங்க் ஆப் பரோடாவை எதிர்த்து 25 ரன்கள் வித்தியாசத்தில் ரிலையன்ஸ் 1 வெற்றி பெற உதவினார். 

செப்டம்பர் மாதம் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி 20 போட்டியில் கடைசியாக இந்தியாவுக்காக விளையாடிய ஹார்திக், முதுகில் ஏற்பட்டகாயம் காரணமாக, அவர் போட்டியில் பங்கேற்கவில்லை. இதற்காக கடந்த ஆண்டு அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருந்தது. ஆனால் வெள்ளிக்கிழமை நடந்த போட்டியில் ஹார்திக் பாண்டியாவின் ஆட்டம், அவர் மீண்டும் பழைய பார்முக்கு வந்துட்டார் என்ற அறிகுறியைக் காட்டினார்.

டி.ஒய் பாட்டீல் டி 20 கோப்பையில் ரிலையன்ஸ் 1 அணிக்காக 4 வது இடத்தில் பேட்டிங் செய்ய வந்த ஹார்திக் 25 பந்துகளில் 38 ரன்கள் எடுத்து ரிலையன்ஸ் 1 அணி 8 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்கள் எடுக்க உதவினார்.

 

இந்திய அணி நிர்வாகத்தையும் மில்லியன் கணக்கான ஹார்திக் பாண்டியாவின் ரசிகர்களையும் மகிழ்விக்கும் உண்மை என்னவென்றால், அவர் தனது இன்னிங்ஸில் நான்கு சிக்ஸர்கள் மற்றும் நான்கு பவுண்டரிகளை அடித்தார். நீண்ட காலம் ஆடாமல் இருந்தாலும், அவர் தனது அதிரடியை இழக்கவில்லை என்பதற்கான தெளிவான அறிகுறியைக் கொடுத்தார்.

Trending News