இந்திய கிரிக்கெட் அணியின் டெஸ்ட் கேப்டனாக இருந்த விராட் கோலி தனது ஏழு ஆண்டுகால தலைமைப் பொறுப்பில் இருந்து விலகினார்.
உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் மறக்க முடியாத சில வெற்றிகளை இந்திய அணி அவரது தலைமையில் பெற்றது. கோஹ்லியின் (Virat Kohli the Captain) தலைமையின் கீழ் இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த வெற்றிச் சரித்திரம் இது...
இந்தியா vs ஆஸ்திரேலியா, அடிலெய்டு 2018
அடிலெய்டில் உள்ள ஓவல் மைதானத்தில் நடந்த தொடரின் தொடக்க ஆட்டத்தில் திரில் வெற்றியுடன் 2018-19 ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தை இந்தியா தொடங்கியது.
சேட்டேஷ்வர் புஜாராவின் அற்புதமான 123 ரன்களில் இந்தியா முதல் இன்னிங்ஸில் 250 ரன்களை எடுத்தது, அதற்கு முன் ஆஸ்திரேலியாவை தனது முதல் இன்னிங்ஸில் 235 ரன்களுக்குச் சுருட்டியது.
முதல் இன்னிங்க்ஸில் சதமடித்த புஜாரா, இரண்டாவது இன்னிங்ஸில் அரைசதம் அடித்தார். 323 ரன்கள் இலக்குடன் களமாடிய ஆஸ்திரேலியா, 291 ரன்களுக்கு ஆட்டமிழக்கச் செய்து இந்திய அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இந்த வெற்றியானது ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியாவின் முதல் டெஸ்ட் தொடரை வெல்வதற்கு வழி வகுத்தது, மேலும் இந்த சாதனையை எட்டிய முதல் இந்திய கேப்டன் கோஹ்லி என்ற பெருமையும் பெற்றார் விராட் கோலி.
ALSO READ | டெஸ்ட் போட்டிகளில் கேப்டன் பதவியிலிருந்து விலகினார் விராட் கோலி
இந்தியா vs தென்னாப்பிரிக்கா, ஜோகன்னஸ்பர்க் 2018
தென்னாப்பிரிக்காவில் இந்தியாவின் டெஸ்ட் கேப்டனாக விராட் கோலியின் முதல் டெஸ்ட் வெற்றி 2018 இல் ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள வாண்டரர்ஸ் மைதானத்தில் கிடைத்தது.
இந்தியா முதல் இன்னிங்ஸில் 187 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது, ஆனால் ஜஸ்பிரித் பும்ராவின் பந்து வீச்சு தென்னாப்பிரிக்காவை 194 ரன்களுக்கு கட்டுப்படுத்த உதவியது.
கேப்டன் விராட் கோலி (Virat Kohli) மற்றும் அஜிங்க்யா ரஹானே ஆகியோரின் அபாரமான ஆட்டத்தால், இந்தியா இரண்டாவது இன்னிங்ஸில் 247 ரன்கள் எடுத்தது.
தென்னாப்பிரிக்க அணி 177 ரன்களுக்கு ஆட்டமிழந்ததால், இந்தியா 63 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தியா vs ஆஸ்திரேலியா, பெங்களூரு 2017
புனேவில் நடந்த தொடர்-தொடக்க போட்டியில் 333 ரன்கள் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை சந்தித்த இந்திய அணிக்கு அழுத்தம் அதிகமாக இருந்தது.
பெங்களூருவில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இந்தியா முதல் இன்னிங்ஸில் 189 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்சில் மொத்தம் 274 ரன்கள் எடுத்தது.
முதல் இன்னிங்ஸில் 90 ரன்களை குவித்த கே.எல் ராகுல், மீண்டும் ஒரு முறை பேட்டிங்கில் அரை சதம் அட்டித்தார். இந்தியா தனது இரண்டாவது இன்னிங்ஸில் 274 ரன்கள் குவித்தார்.
188 ரன்கள் என்ற சுலபமான இலக்குடன் களமிறங்கிய அணிக்கு ஆர்.அஷ்வின் தனது அபாரமான பந்துவீச்ச்சால் விக்கெட்டுகளை வீழ்த்தி, நான்கு போட்டிகள் கொண்ட தொடரை 1-1 என சமன் செய்ய வைத்தார்.
இந்தியாவின் இந்த பரபரப்பான வெற்றி, தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்ற உதவியது.
ALSO READ | கேப்டன் பதவி மேல் பேராசை இல்லாதவர் கோலி : அனுஷ்கா ஷர்மா
இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ், ராஜ்கோட் 2018
2018 ஆம் ஆண்டு சொந்த மண்ணில் நடைபெற்ற ராஜ்கோட் டெஸ்டில் இந்தியா மேற்கிந்தியத் தீவுகளை துவம்சம் செய்தது.
விராட் கோலி (Virat Kohli), பிரித்வி ஷா மற்றும் ரவீந்திர ஜடேஜா என இந்திய வீரர்களின் சத மழையால், முதலில் பேட்டிங் செய்த இந்தியா 649 ரன்கள் குவித்து பிரமிப்பை ஏற்படுத்தியது.
அடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியின்முதல் இன்னிங்ஸில் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார் அஸ்வின். வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்க்ஸில்181 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இரண்டாவது இன்னிங்ஸில் குல்தீப் யாதவ் எடுத்த ஐந்து விக்கெட்டுகளால், எதிரணி 196 ரன்களில் சுருண்டது. ஒரு இன்னிங்ஸ் மற்றும் 242 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது, கோஹ்லியின் தலைமையில் இந்தியா படைத்த சரித்திர வெற்றி என்று சொல்லலாம்.
ALSO READ | விராட் கோலியின் டெஸ்ட் கேப்டன்சி சாதனைகள்!
இந்தியா vs இங்கிலாந்து, லார்ட்ஸ் 2021
விராட் கோலியின் தலைமையின் கீழ் இந்தியாவின் சிறந்த வெளிநாட்டு டெஸ்ட் வெற்றிகளில் ஒன்று கடந்த ஆண்டு லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டி.
முதல் ஆட்டத்தை டிரா செய்த பிறகு, லார்ட்ஸ் மைதானத்தில் இந்தியா மீண்டும் மீண்டு வந்தது. கே.எல்.ராகுலின் சதத்தால் இந்திய அணி முதல் இன்னிங்சில் 329 ரன்கள் குவித்தது.
ஜோ ரூட்டின் அபாரமான 180 ரன்களில் இங்கிலாந்து 391 ரன்கள் எடுத்து முன்னிலை பெற்றது. ஜஸ்பிரித் பும்ரா மற்றும் முகமது ஷமி ஆகியோரின் அதிரடி ஆட்டத்தால் இந்தியா, இரண்டாவது இன்னிங்ஸில் 298 ரன்களை எடுத்தது. இங்கிலாந்து 120 ரன்களுக்கு ஆட்டமிழக்க, 151 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது.
ALSO READ | புதிய கேப்டனை தேர்ந்தெடுக்க போதுமான அவகாசம் உள்ளது - பிசிசிஐ
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR