இந்தியன் பிரீமியர் லீக் (IPL) ஐக்கிய அரபு எமிரேட்ஸில் செப்டம்பர் 19 ஆம் தேதி தொடங்க உள்ளது. போட்டிகளுக்கான பயிற்சியை அணிகள் துவக்கியுள்ள நிலையில், வீரர்கள் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு செல்வதற்கு முன்னர் COVID பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படுகிறார்கள்.
சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) கேப்டன் மகேந்திர சிங் தோனியும் வரவிருக்கும் சீசனுக்காக புதன்கிழமை COVID-19 சோதனைக்கு உட்படுத்தப்பட்டார். மேலும் அவரது சோதனை அறிக்கை இன்று வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தனியார் குருநானக் மருத்துவமனையில் உள்ள மைக்ரோ பிராக்சிஸ் ஆய்வகம் புதன்கிழமை மாநில தலைநகரில் உள்ள சிமாலியாவைச் சேர்ந்த பண்ணை வீட்டில் இருந்து தோனியின் மாதிரியை பரிசோதனைக்கு எடுத்தது. தோனியைத் தவிர, மற்றொரு CSK வீரரான மோனு குமார் சிங்கும் தனது மாதிரிகளை வழங்கினார்.
இரு வீரர்களின் சோதனை அறிக்கை வியாழக்கிழமை வரும் என்று எதிர்பார்க்கப்படுவதாக குரு நானக் மருத்துவமனையின் வட்டாரங்கள் தெரிவித்தன.
அவர்களின் அறிக்கைகள் எதிர்மறையாக வெளிவந்தால், இரு வீரர்களும் சென்னைக்கு புறப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னையில் CSK, IPL -க்கு ஐந்து நாள் முகாமை ஏற்பாடு செய்ய முடிவு செய்துள்ளது.
எம் எஸ் தோனியின் (MS Dhoni) வருகை ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. அவர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு கிரிக்கெட் மைதானத்தில் காணப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.
ALSO READ: IPL 2020: ராஞ்சியில் நெட் பயிற்சியைத் துவக்கினார் CSK கேப்டன் MS Dhoni!!
2022 ஆம் ஆண்டு வரை அவர் தொடர்ந்து போட்டிகளில் விளையாடக்கூடும் என அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எம்.எஸ். தோனி IPL 2020 மற்றும் 2021 என இரண்டு பதிப்புகளிலும் கண்டிப்பாக விளையடுவார் என்றும் 2022 ஆம் ஆண்டின் பதிப்பிலும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன என்று CSK வட்டாரங்கள் முன்பே தெரிவித்திருந்தது நினைவிருக்கலாம்.
அவர் ஜார்க்கண்டில் நெட் பயிற்சியிலும் சில நாட்களாக ஈடுபட்டிருந்தார். தற்போது COVID பரிசோதனைகளுக்கான முடிவுகள் வந்தவுடன் பயிற்சி முகாமில் கலந்துகொள்ள அவர் சென்னை செல்வார் என எதிர்பார்க்கபப்டுகின்றது.
ALSO READ: தோனி மற்றும் CSK ரசிகர்களின் முகத்தில் புன்னகையை வரவழைக்கும் வைரல் செய்தி