நிதிஷ்குமார் ரெட்டிக்கு பதில் இவரை சேர்த்தால்... இந்திய அணி பலமாகும் - என்ன காரணம்?

India vs Australia: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 3ஆவது டெஸ்ட் போட்டியில் இருந்து நிதிஷ்குமார் ரெட்டியை நீக்குவது இந்திய அணிக்கு பெரிய நன்மையை அளிக்கும். அதுகுறித்து விரிவாக இங்கு காணலாம்.

Written by - Sudharsan G | Last Updated : Dec 11, 2024, 11:07 AM IST
  • 3வது டெஸ்ட் போட்டி டிச.14ஆம் தேதி தொடங்குகிறது.
  • காபா மைதானத்தில் இப்போட்டி நடைபெறுகிறது.
  • இதில் இந்திய அணியில் பெரிய மாற்றம் செய்யப்படலாம்.
நிதிஷ்குமார் ரெட்டிக்கு பதில் இவரை சேர்த்தால்... இந்திய அணி பலமாகும் - என்ன காரணம்? title=

India vs Australia, Gabba Test: 2024-25 பார்டர் - கவாஸ்கர் கோப்பை (Border Gavaskar Trophy) தொடரின் மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு இந்தியா - ஆஸ்திரேலியா காத்திருக்கின்றன. வரும் டிச. 14ஆம் தேதி பிரிஸ்பேன் நகரின் காபா மைதானத்தில் (Gabba) இப்போட்டி நடைபெறுகிறது. தொடர்ந்து ஆதிக்கம் செலுத்த ஆஸ்திரேலிய அணியும், மீண்டெழுவதற்கு இந்திய அணியும் முனைப்பு காட்டும்.

ஆஸ்திரேலிய அணி தனது பிளேயிங் லெவனில் பெரிதாக கை வைக்காது எனலாம். ஹசில்வுட் காயத்தில் இருந்து மீளாத நிலையில், அவருக்கு பதில் இந்த போட்டியிலும் ஸ்காட் போலாண்ட் தொடர்வார் என எதிர்பார்க்கலாம். மிட்செல் மார்ஷ் உடற்தகுதி காரணமாக அவருக்கு பதில் பியூ வெப்ஸ்டர் விளையாடுவார் என கூறப்படுகிறது. இதை தவிர்த்து பெரிதாக மாற்றம் இருக்காது.

அதேநேரத்தில், இந்திய அணி (Team India) அடுத்த போட்டிக்கு பெரிய மாற்றங்களை செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. வேகப்பந்துவீச்சில் ஹர்ஷித் ராணா, ஆல்-ரவுண்டர் ரவிசந்திரன் அஸ்வின் ஆகியோருக்கு பதில் வாஷிங்டன் சுந்தர், ஆகாஷ் தீப் ஆகியோர் அணியில் சேர்க்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ரோஹித் சர்மா டாப் ஆர்டருக்கு மாறுவாரா அல்லது மிடில் ஆர்டரில் தொடர்வாரா என்பதும் பெரிய கேள்வியாக உள்ளது. இந்திய அணிக்கு வேகப்பந்துவீச்சும், பேட்டிங்கும் பெரிய பிரச்னையாக இருப்பதால் அணியில் சமநிலையை அடையை நிச்சயம் ஒரு தீர்வை கம்பீர் - ரோஹித் காம்போ கண்டறிய வேண்டும் எனலாம்.

மேலும் படிக்க | IND vs AUS: ஜஸ்பிரித் பும்ரா காயம்? 3வது டெஸ்டில் விளையாடுவது சந்தேகம் தான்!

நிதிஷ்குமாருக்கு ஓய்வளிக்க வேண்டும்

ஏனென்றால் பேட்டிங்கில் ஜெய்ஸ்வால், கேஎல் ராகுல், சுப்மன் கில், விராட் கோலி, ரிஷப் பண்ட், ரோஹித் சர்மா என பலமான பேட்டர்கள் இருக்கிறார்கள். இவர்களில் மாற்றம் செய்ய இயலாது. இதையடுத்து, நிதிஷ் குமார் ரெட்டி, ரவிசந்திரன் அஸ்வின் ஆகியோர் ஆல்-ரவுண்டர்களாக இருக்கின்றனர். இந்த இடத்தில்தான் இந்திய அணி மாற்றம் செய்ய வேண்டும். அந்த வகையில், நிதிஷ் குமார் ரெட்டியை வெளியே வைத்துவிட்டு அவருக்கு பதில் ஒரு பிரதான வேகப்பந்துவீச்சாளரை அணிக்குள் கொண்டு வருவதே சரியாக இருக்கும்.

கூடுதல் வேகப்பந்துவீச்சாளர் தேவை

4 வேகப்பந்துவீச்சு, 1 சுழற்பந்துவீச்சு என்ற பார்முலாவுடன் வரும் இந்திய அணிக்கு நிதிஷ்குமார் ரெட்டி (Nitish Kumar Reddy) வேகப்பந்துவீச்சில் பெரியளவில் சோபிக்கவில்லை. ஆஸ்திரேலிய அணியில் (Team Australia) மிட்செல் மார்ஷூம் இப்படி தானே இருக்கிறார் என நீங்கள் கேள்வி எழுப்பலாம். ஆனால் ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர்கள் ஸ்டார்க் - ஹசில்வுட் - கம்மின்ஸ் ஆகியோர் நீண்ட ஓவர்களை வீச பல ஆண்டுகளாக பழகிவிட்டனர்.

இது இந்திய வேகப்பந்துவீச்சாளர்களுக்கு பெரிய தலைவலியாக இருக்கும். நீண்ட ஸ்பெல்களை போடுவதால் அவர்களால் தொடர்ச்சியாக ஒரே லைன் மற்றும் லெந்தில் பந்துவீச இயலாது. அப்படியிருக்க இந்திய அணி ஒரு கூடுதல் வேகப்பந்துவீச்சாளருடன் செல்வதே சரியாக இருக்கும்.

நிதிஷ்குமாரின் பேட்டிங்கும், பௌலிங்கும்...

நடந்து முடிந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளையும் சேர்த்து இந்திய அணி மொத்தம் 200.5 ஓவர்களை வீசி உள்ளது. அதில் 165.5 ஓவர்கள் வேகப்பந்துவீச்சாளர்கள் வீசியதாகும். அதில் நிதிஷ்குமார் வெறும் 14 ஓவர்களை மட்டுமே வீசி உள்ளார். ஆனால் அவர் பேட்டிங்கில் மற்ற பேட்டர்களை விட சிறப்பாக விளையாடியிருக்கிறார். நடந்த 4 இன்னிங்ஸ்களில் நிதிஷ்குமார் 3 இன்னிங்ஸ்களில் அதிகபட்ச ரன்களை பதிவு செய்திருக்கிறார்.

மேலும் படிக்க | IND vs AUS: 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி செய்த அதிரடி மாற்றம்! பிளேயிங் 11 இதுதான்!

அனைத்து இன்னிங்களிலும் 38 ரன்களுக்கு மேல் அடித்துள்ளார். மூன்று முறை 40 ரன்களை தாண்டியுள்ளார். இதன்மூலம், ஆஸ்திரேலியாவில் ஷிகர் தவாண், கௌதம் கம்பீர், எம்எஸ் தோனி, ரவீந்திர ஜடேஜா ஆகியோரை விட அதிக முறை 40 ரன்களை கடந்தவர் என்ற பெருமையை இப்போதே பெற்றுவிட்டார். ஆஸ்திரேலியாவில் அதிக சிக்ஸர்கள் அடித்த இந்தியர்களின் பட்டியலில் இவரை விட அதிகமாக மூன்று வீரர்கள் மட்டுமே அடித்துள்ளனர். நிதிஷ்குமார் வெறும் 2 போட்டிகளை மட்டுமே விளையாடியிருக்கிறார்.

ஏன் நிதிஷ்குமாரை நீக்க வேண்டும்?

இந்தச் சூழலில் இவரை எப்படி வெளியேற்ற முடியும் என நீங்கள் கேட்கலாம். ஆனால், நிதிஷ்குமாருக்கு இந்திய அணியில் தற்போது இருக்கும் பணி பேட்டர்களுக்கு அழுத்தம் ஏற்படுத்தி, விக்கெட்டுகளை எடுப்பதுதான். ஆனால் இவரது பந்துவீச்சு பெரியளவில் அழுத்தம் செலுத்தவில்லை. இப்போதைய நிலைப்படி இந்திய அணி எதிரணியை 20 விக்கெட்டுகளையும் விரைவாக எடுக்க வேண்டும். அதுவே முதல் இலக்கு. அனைத்து இன்னிங்ஸ்களிலும் 40 ரன்களை மற்ற பேட்டர்கள் சேர்ந்து கூட அடிக்கலாம். ஆனால் வேகப்பந்துவீச்சாளர்கள் விக்கெட் எடுப்பது மிக மிக அவசியமாகிறது.

எனவே, பிரிஸ்பேனும் வேகப்பந்துவீச்சுக்கு நல்ல ஒத்துழைக்கும் என்பதால் ஆகாஷ் தீப்பை (Aakash Deep) அணிக்குள் கொண்டுவரலாம். ஹர்ஷித் ராணா அணியில் தொடரலாம். ஆல்-ரவுண்டராக வாஷிங்டன் சுந்தர் அணிக்குள் வரும்பட்சத்தில் டாப் 7 முழுவதும் பேட்டர்கள் இருப்பார்கள். பும்ரா, சிராஜ், ஆகாஷ் தீப், ஹர்ஷித் ராணா ஆகியோர் இணைந்து வேகப்பந்துவீச்சை பார்த்துக்கொள்ளலாம்.

நிதிஷ்குமார் பொக்கிஷம்

ஆனால், இந்திய அணி இதை செய்ய 1% வாய்ப்பு கூட இல்லை என்றாலும், அணி சமநிலை பெற வேண்டும் என்றால் கம்பீரும், ரோஹித்தும் இந்த கசப்பான முடிவை எடுத்தே ஆக வேண்டும். பேட்டர்கள் கூடுதல் பொறுப்போடு களமிறங்க வேண்டும். நிச்சயம் நிதிஷ்குமார் ரெட்டி இந்திய அணிக்கு கிடைத்த பெரும் பொக்கிஷம், ஆனால் தற்போது அவரை வெளியே வைப்பதே அணிக்குள் சமநிலையை ஏற்படுத்தும்.

மேலும் படிக்க | ஆஸ்திரேலியா தொடருக்கு பின்... டெஸ்டில் ஓய்வுபெற்ற 6 இந்திய வீரர்கள்... யார் யார் தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News