ஆடி மாதம் வரும் வெள்ளிக்கிழமை நாட்கள் அனைத்துமே சிறப்பானவை. இன்று குரோதி ஆண்டின் மூன்றாம் ஆடிவெள்ளி
ஆடி மாத வெள்ளிக்கிழமை அன்று அனுசரிக்கும் லட்சுமி விரதம் விஷேசமானது. விரதம் இருந்து கலசம் அமைத்து அம்பாளை அலங்கரித்து வழிபடுவார்கள்
ஆவணி மாதம் பௌர்ணமி நாளுக்கு முந்தையதாக வரும் வெள்ளிக் கிழமையில் வரலட்மி விரத பூஜை மேற்கொள்ளப்படுகிறது
குரோதி ஆண்டில் ஆடிவெள்ளியன்றே வரலட்சுமி நோன்பு வருவது மிகவும் சிறப்பானது. ஆடிவெள்ளியிலே இந்த விரதமும் இருந்தால் இரட்டிப்பு பலன்கள் கிடைக்கும்
மகாலட்சுமி அன்னைக்கு வெள்ளிக்கிழமைகளில் செய்யும் பூஜையானது சுக்கிரனின் ஆசியையும் கொண்டு வந்து சேர்க்கும். சுக்கிரனின் அதிதேவதை மகாலட்சுமி
நித்திய சுமங்கலி என்று அழைக்கப்படும் அன்னை மகாலட்சுமிக்கு விரதம் இருந்தால் சகல செளபாக்கியங்களும் கிடைக்கும்
வரலட்சுமி விரத பூஜை செய்தால் திருமணமாகாத பெண்களுக்கு திருமண யோகம் கைகூடும்
வரலட்சுமி விரதம் இருந்து பூஜை செய்யும் வீடுகளில் மகாலட்சுமி வாசம் செய்வாள்
பாரம்பரிய நம்பிக்கைகள், தொன்றுதொட்டு தொடரும் நம்பிக்கைகள், பழக்கவழக்கங்களின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரையின் உள்ளடகத்திற்கு ஜீ மீடியா பொறுப்பேற்காது