சூரிய கிரகணம் இந்த ஆண்டின் இரண்டாவது கிரகணமாக நிகழவிருக்கிறது. பித்ரு பக்ஷத்தில் வரும் இந்த கிரகணம் பலருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும், அன்று சூரியன் மற்றும் சனியினால் ஏற்படும் ஷடாஷ்டக தோஷமும் ஏற்படுகிறது
அக்டோபர் இரண்டாம் நாளன்று, சூரியன், புதன், கேது ஆகிய மூன்று கிரகங்களும் கன்னி ராசியில் ஒன்றாக இருக்கும். இந்த மூன்று கிரகங்களின் அசுபத்தன்மையுடன் சேர்ந்து ராகுவின் அசுப பார்வையும் இணைவது நிலைமையை மோசமாக்குகிறது
வியாபாரத்தில் நஷ்டம் ஏற்படலாம், தேவையற்ற செலவுகளால் சிரமம் ஏற்படும் என்பதால் கவனமாக இருக்கவும், வாகனம் ஓட்டும்பொடொஹு கவனம் தேவை
ஆரோக்கியத்தில் மோசமான விளைவை ஏற்படுத்துவதால் மிதுன ராசிக்காரர்களுக்கு செலவு அதிகரிக்கும். வாக்குவாதம் அல்லது தகராறு ஏற்படும் என்பதால் எச்சரிக்கையாக இருக்கவும்
கருத்து வேறுபாடு விரிசலை உருவாக்காமல் பார்த்துக் கொள்வது கடக ராசியினருக்கு நல்லது. நிதி பரிவர்த்தனைகள் மற்றும் முதலீடுகளில் கவனமாக இருக்கவும், யாரையும் கண்மூடித்தனமாக நம்பாதீர்கள்.
நிதி இழப்பு அல்லது பணம் வருவதில் தடைகள் ஏற்படலாம். ஏமாற்றத்தையும் விரக்தியையும் தவிர்க்க அமைதியாக இருக்கவும். விருச்சிக ராசியினர் சூரிய கிரகணத்தன்று எந்த முடிவையும் எடுக்க வேண்டாம்
சூரிய கிரகணம் எதிர்மறை மற்றும் தீங்கு விளைவிக்கும் பாதிப்புகளை ஏற்படுத்தினாலும், மீன ராசிக்காரர்கள் புதிய வேலைகளை தவிர்த்தால் பிரச்சனைகளை குறைத்துக் கொள்ளலாம் கவனமாக செலவு செய்யுங்கள்
பாரம்பரிய நம்பிக்கைகள், தொன்றுதொட்டு தொடரும் நம்பிக்கைகள், பழக்கவழக்கங்களின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரையின் உள்ளடகத்திற்கு ஜீ மீடியா பொறுப்பேற்காது