அறுபடை வீடு கொண்ட திருமுருகா திருமுருகாற்றுப்படை தனிலே வருமுருகா! முருகனின் அறுபடைவீடுகள்

Malathi Tamilselvan
Mar 15,2024
';

முருகன்

தமிழ்க் கடவுள் முருகனுக்கும் ஆறு என்ற எண்ணுக்கும் உள்ள தொடர்பு ஆழமானது. ஆறு கார்த்திகை பெண்களால் வளர்க்கப்பட்ட அறுமுகன் ஆறுமுகன்...

';

கௌமாரம்

முருகனை முழு முதற் கடவுளாகக் கொண்ட இந்து சமயப் பிரிவு கௌமாரம். கடவுள் முருகனை வழிபாடு செய்யும் சமயக் கோட்பாட்டை கொண்ட முருக வழிபாடு கெளமாரம்

';

அறுபடை வீடு

முருகனுக்கு மட்டும் தான் அறுபடை வீடுகள் உள்ளன. முருக வழிபாட்டில் முக்கியமான அறுபடை வீடுகளில் குடி கொண்டுள்ள முருகனின் கோவில்கள் அமைந்துள்ள இடங்கள் மற்றும் அவற்றின் சிறப்புகள்

';

திருப்பரங்குன்றம்

முருகனின் முதலாவது படைவீடு திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் ஆகும். அசுரனை வென்ற முருகன் திருப்பரங்குன்றத்தில் இந்திரனின் மகளான தெய்வானையை திருமணம் செய்து கொண்டார். இது மதுரையில் அமைந்துள்ள திருக்கோவில் ஆகும்

';

திருச்செந்தூர்

இரண்டாம் படை என்று போற்றப்படும் சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ள திருச்செந்தூர் கடலோரத்தில் அமைந்துள்ள கோவில் ஆகும். கைலாயத்திற்கு சமமானதாக திருச்செந்தூர் போற்றப்படுகிறது

';

பழனி

முருகனின் மூன்றாம் படைவீடான பழனி, ஞானப்பழம் தனக்கு கிடைக்காததால், ஆண்டிக் கோலம் பூண்டு கோபத்தில் வந்து அமர்ந்த இடம்.

';

சுவாமிமலை

முருகனின் நான்காவது படைவீடான சுவாமிமலையில், முருகன் தனது தந்தையான சிவனுக்கு பிரணவ மந்திரத்தின் பொருளை கூறினார். இங்குள்ள முருகனுக்கு சுவாமிநாதன் எனப் பெயர்

';

திருத்தணி

முருகனின் ஐந்தாம் படைவீடான திருத்தணியில், முருகன் வேடர்குலத்தில் பிறந்த வள்ளியைக் காதல் மணம் புரிந்துகொண்டார்

';

பழமுதிர்ச்சோலை

சுட்டப்பழம் வேண்டுமா.. சுடாத பழம் வேண்டுமா என்று ஒளவையிடம் கேட்ட இடம் பழமுதிர்ச்சோலை. இங்கு சோலைமலை முருகன் குடி கொண்டுள்ளார்

';

VIEW ALL

Read Next Story