சனி அஸ்தமனத்தால் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசிகள்..!
சூரியனை நெருங்கும் சனி அஸ்தமனமாவதால் பாதிக்கப்படும் 4 ராசிகள். எச்சரிக்கை அவசியம்
2023 சனியின் முதல் அஸ்தமனம்: கர்ம காரகர் என்று அழைக்கப்படும் சனி பகவான், அஸ்தமனமாவதால் பாதிப்பு யாருக்கு என்று தெரிந்துக் கொண்டால் எச்சரிக்கையாக இருக்கலாம்.
சனீஸ்வரர் என்று அழைக்கப்படும் சனி பகவான், கடமை, கட்டுப்பாடு, ஒழுக்கம், பணிவு, நேர்மை மற்றும் தவம் ஆகியவற்றின் முன்னோடி. அவரவர் கர்மங்களுக்கு ஏற்ப நீதி வழங்கும் நீதிதேவன்.
மகரம், கும்பம் ஆகிய இரு ராசிகளின் அதிபதி சனி.
சனி தனது சொந்த ராசியான கும்ப ராசியில் அஸ்தமனமாகிறார்.
கும்ப ராசியில் எரிப்பு நிலைக்கு ஆளாவதால், ரிஷப ராசிக்காரர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். சனீஸ்வரரின் நற்பலன்கள் எதுவும் கிடைக்காது என்ற நிலையில், செய்யும் வேலைகளில் கவனம் அதிகம் தேவை.
கடக ராசிக்காரர்களுக்கு சனிபகவான் எரிப்பு நிலைக்கு செல்வதால், பாதகமான தாக்கம் பதிக்காமல் இருக்க அமைதியைக் கடைபிடியுங்கள். சனிக்கிழமையில் சனீஸ்வரருக்கு விளக்கேற்றி வழிபடவும். பழைய கடன்களிலிருந்து விடுபடலாம் என்று நினைத்தாலும், அது சாத்தியமாகாது. இது மனதில் கவலைகளை அதிகரிக்கும்.
சனியின் பாதகமான பலன்கள் பெரிய அளவில் உங்களைப் பாதிக்காது. சனி அஸ்தமனமாவதால் வேலையில் சில பிரச்சனைகள் ஏற்படுலாம். இருப்பினும், வாக்கு ஸ்தானம் பலவீனப்படுவதால், வாய் வார்த்தைகள், உங்களுக்கு எதிரிகளை உண்டாக்கும்.
நீண்ட காலமாக நிலுவையில் உள்ள விஷயங்கள் தற்போது முடியும் நிலைக்கு வந்தால், அதில் உங்களுக்கு சாதகமான சூழல் ஏற்படாது. பண விரயம் அதிகரிக்கும். வாழ்க்கையில் நடக்கும் பிரச்சனைகள், விரக்தியை அதிகரிக்கும்.