ஆதிசக்தி அன்னையின் சக்திகள் உச்சகட்டத்தில் இருக்கும் நாள் நவராத்திரியின் நவமி நாளில் தான். தீமையை அழித்த நன்மையின் இறுதி வெற்றியைக் கொண்டாடும் நாள் இன்று
நவராத்திரியின் ஒன்பது இரவுகளில்,தெய்வத்தின் தெய்வீக சக்தியின் உச்சக்கட்டமான நாள் இன்று... இன்று செய்யும் பூஜைகளும் வேண்டுதல்களும் பலனளிப்பவை
நவமியின் மிக முக்கியமான சடங்குகளில் ஒன்று, இது சிறுமிகளை வழிபடும் சடங்கு ஆகும். துர்கா தேவியின் ஒன்பது வடிவங்களைக் குறிக்கும் வகையில் ஒன்பது பெண் குழந்தைகளுக்கு பூஜைகள் செய்வது வழக்கம்
தெய்வத்தின் வடிவமாக கருதப்படும் பெண் குழந்தைகளுக்கு உணவு, அலங்காரப் பொருட்கள் கொடுத்து அவர்களை மகிழ்ச்சிபடுத்தும் நாள். இன்றைய சடங்கு தெய்வீக பெண் ஆற்றலின் அங்கீகாரத்திற்கானது
கன்யா பூஜைக்கு அடுத்த நாள் விஜயதசமி, தீமைகள் ஒழிந்த பின், நல்லன நடப்பதற்காக பிள்ளையார்சுழி போடும் நாள்
பல்வேறு பகுதிகளில், ஊர்வலங்கள், பாரம்பரிய நாடகங்கள் மற்றும் இசை நிகழ்ச்சிகள் போன்ற கலாச்சார விழாக்களுடன் நவமி கொண்டாடப்படுகிறது.
சமூகங்களாக ஒன்று கூடும் மக்கள், தங்கள் கலாச்சார பாரம்பரியம் மற்றும் கலைத் திறமைகளை வெளிக்கொணரும் தருணம் இது.
தீயன அழிந்தன என்று மக்கள் கூடி, கொண்டாடும் நாள் நவமி. கர்பா மற்றும் டாண்டியா நடனங்கள் ஆடும் வழக்கம் பிரசித்தி பெற்றது
பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்ட இந்தத் தகவல்களுக்கு ஜீ நியூஸ் பொறுப்பேற்காது