மனிதர்களின் வாழ்க்கையை நிர்ணயம் செய்யும் கிரகங்களான நவகிரகங்களின் மாற்றங்களும், இயக்கமும் நமது வாழ்க்கையில் எதிரொலிக்கின்றன
நவகிரகங்களில் ராகு மற்றும் கேது மட்டும் சாயா கிரகங்கள் நிழல் கிரகங்கள் என அழைக்கப்படுகின்றன. இந்த இரண்டு கிரகங்களுக்கும் சொந்த வீடு இல்லை
சொந்த வீடு இல்லாத இந்த நிழல் கிரகங்களின் பாதிப்பு வாழ்க்கையில் அனைவருக்கும் இருக்கும். அதிலும் ராகு ஆசையில் விழ வைத்தால், கேது பற்றற்ற நிலையைக் கொடுப்பார்.
கேதுவின் கூட்டாளியான ராகு கொடுத்தால், கேது கெடுப்பார். அதேபோல கேது கொடுத்தால் ராகு கெடுப்பார். அதாவது சிந்தனை முதல் செயல் வரை இந்த இரு கிரகங்களும் மனிதர்களை மாற்றி மாற்றி அலைகழிக்கும்
கேது புத்தியை ஆள்பவர் என்பதால் அவருக்கு ஞானக்காரகர் என்று பெயர். அறிவாளிகள், கேதுவின் ஆதிக்கத்தில் இருப்பவர்களாக இருப்பார்கள்
நவகிரகங்களில் நிழற்கிரகங்களில் ஒருவரான கேது பகவான், ஞானத்தை மட்டுமல்ல மோட்சத்தையும் அருள்பவர் ஆவார்
நவகிரகங்களின் நாயகரான சிவனை வழிபட்டாலும், அவரது மைந்தனான ஆனைமுகனை வழிபட்டாலும் கேதுவின் கிரக தோஷ பாதிப்புகள் அகலும்
பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது