இன்றைய ராசிபலன்... மேஷ ராசி முதல் மீன ராசி வரை!

Vidya Gopalakrishnan
Feb 05,2024
';

மேஷம்

நீண்ட கால கடன் பிரச்சினைகள் நீங்கும். பழக்கவழக்கங்களில் மாற்றங்கள் ஏற்படும். எதிர்பாராத சில பயணங்கள் அலைச்சலை கொடுக்கலாம்.

';

ரிஷபம்

மனதில் புதிய மாற்றம் ஏற்படும். தடைபட்ட செயல்களை செய்து முடிப்பீர்கள். அலுவலகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும்.

';

மிதுனம்

பேச்சுக்களில் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும். பொது காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள்.

';

கடகம்

புத்திசாலித்தனமான நடவடிக்கைகள் மூலம் பணிகள் சிறக்கும். அனுபவம் மிக்கவர்களின் ஆலோசனைகளால் பயன் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும்.

';

சிம்மம்

நிதி ரீதியான நெருக்கடிகள் தீரும். உத்தியோக பணிகளில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும்.

';

கன்னி

தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு வெற்றியை அடைவீர்கள். எனினும் சில காரியங்களில் தடைகள் ஏற்படலாம். முதலீட்டின் மூலம் லாபம் கிடைக்கும்.

';

துலாம்

உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். காரிய தடைகள் விலகும். வாழ்க்கைத் துணையுடன் புரிதல் மேம்படும்.

';

விருச்சிகம்

நிதானமாக செயல்படுவது நன்மை அளிக்கும். அலுவலகப் பணிகளில் எச்சரிக்கையுடன் இருக்கவும். வீண் கோபத்தை தவிர்ப்பது நல்லது.

';

தனுசு

உறவினர்களால் அலைச்சல்கள் ஏற்படலாம். முதலீடுகளில் கவனம் தேவை. முக்கிய முடிவு எடுக்கும் முன் குடும்பத்தினரை கலந்தாலோசிக்கவும்.

';

மகரம்

பணத்தை சேமிக்கும் விஷயத்தில் ஆர்வம் ஏற்படும். மனதிற்குப் பிடித்த வகையில் வேலை செய்யும் வாய்ப்பு கிடைக்கும். பண வரவு மகிழ்ச்சியை தரும்.

';

கும்பம்

தொழிலில் வேலையில் முன்னேறுவதற்கான வாய்ப்பு கிடைக்கும். இழுபறியான பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். மனதில் இருந்து வந்த குழப்பம் விலகும்.

';

மீனம்

நெருக்கமானவர்களுக்கு தேவையான உதவியை செய்வீர்கள். குடும்பத்தில் விட்டுக் கொடுத்து செல்வதால் நன்மை அடையலாம். மனதளவில் தெளிவு பிறக்கும்.

';

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.

';

VIEW ALL

Read Next Story