பெளர்ணமியை அடுத்து வரும் நான்காவது நாள் சதுர்த்தி திதியன்று சங்கடஹர சதுர்த்தியன்று கணபதி வழிபாடு என்பது, வாழ்வில் ஏற்படும் அனைத்து விதமான துன்பங்களை போக்கும் வல்லமை கொண்டது
சங்கடஹர சதுர்த்தி நாளன்று கணபதிக்கு அபிஷேகம் செய்து சிறப்பு வழிபாடுகள் நடத்துவது சிறப்பு...
சங்கடஹர சதுர்த்தி, வியாழக்கிழமையில் வந்தால் அதனை குபேர சங்கடஹர சதுர்த்தி என்று அழைப்பார்கள்
சங்கடஹர சதுர்த்தி நாளன்று விநாயகரை வழிபட்டால், உங்கள் வேண்டுதலை இறைவன் நிறைவேற்றி வைப்பார்
மாலை 6 மணிக்கு மேல் செய்யக் கூடியது சதுர்த்தி வழிபாடு. மாலை 5:30 மணிக்கு மேல் விநாயகருக்கு அபிஷேகம் செய்து வழிபடுவது வழக்கம்
விநாயகர் படத்திற்கு மஞ்சள், குங்குமம், பொட்டு வைத்து மலர்களை சூட்ட, விநாயகருக்கு உகந்த அருகம் புல்லை வைத்த பிறகு தீபம் ஏற்றி வைத்து விடுங்கள்.
விநாயகருக்கு நைவேத்தியமாக எதை வைத்தாலும், அதனுடன் வெல்ல கட்டி மற்றும் இரண்டு ஏலக்காய் வைத்து வழிபட்டால், பண பிரச்சனை கடன் தொல்லை அனைத்து சங்கடங்களும் தீர்ந்துவிடும்
தினசரி தொடர்ந்து விநாயகர் அகவலை படித்து வந்தால் அவர்கள் வாழ்க்கையில் சங்கடம் என்ற வார்த்தைக்கு வழியில்லை என்ற நிலையை விநாயகப் பெருமான் அருள்வார்