திருப்பதி ஏழுமலையானை அதிக நேரம் தரிசிக்கலாம்.. இதை செய்தால் போதும்

Vijaya Lakshmi
Sep 10,2024
';


உலக அளவில் மிகவும் பிரபலமான கோவில்களில் ஒன்று தான் திருப்பதி ஏழுமலையான் கோவில். இங்கு ஆண்டு முழுவதும் லட்ச கணக்கிலான பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர்.

';


திருப்பதிக்கு சென்று வந்தால், திருப்பம் ஏற்படும் என்று கூறுவார்கள். அதற்கேற்ப தரிசனத்திற்காக மக்கள் பல மணிநேரம் காத்திருப்பதால் தரிசனத்திற்கான முன்பதிவுகள் நடத்தப் பட்டு வருகிறது.

';


இங்கு பணம் செலவிட்டு சென்றாலும் சில விநாடிகள் தாந சுவாமியை பார்க்க முடிகிறது. எனவே எவ்வாறு பொறுமையாக அதிக நேரம் இறைவனை தரிசிப்பது?

';


திருப்பதி கோயிலில் காவாளம் என்று சொல்லப்படும் பிரமாண்ட உண்டியலில்தான் பிரபலங்கள் முதல் பொதுமக்கள் வரை யார் வந்தாலும் தங்கள் காணிக்கையை போட்டு செல்கின்றனர்.

';


உண்டியல் நிறைந்ததும் உடனுக்குடன் அதை அங்கிருந்து அப்புறப்படுத்தி வேறு உண்டியலைக் கொண்டு வந்து வைக்கின்றனர்.

';


இந்த உண்டியல் நிறைந்ததும் அதை சீல் வைத்து அங்கிருந்து அதை எடுத்துப் போவார்கள். அப்போது நான் உடன் இருந்தேன் என்று அங்கிருக்கும் இரண்டு பக்தரும் சாட்சிக் கையெழுத்து போட வேண்டும்.

';


இந்த தரிசனத்தின் போது உங்களை எவரும் அவசரப்படுத்த மாட்டார்கள். நின்று நிதானமாகப் பிரார்த்தனை செய்து ஏழுமலையானை வணங்கி வரலாம். இந்த அரிய வாய்ப்பு, காவாளம் உண்டியல் நிரம்பும்போது மட்டுமே கிடைக்கும்.

';

VIEW ALL

Read Next Story