ஒன்பது கிரகங்களில் 7 கிரகங்களுக்கு தனித்துவம் வேறு விதத்தில் இருந்தால், ராகு மற்றும் கேது நிழல் கிரகம் என்று பெயர் பெற்றவை
ஒருவரின் ஜாதகத்தில் ராசி அல்லது லக்னத்திற்கு 2,7 ஆம் இடங்களில் ராகு கேதுக்கள் இருப்பது ராகு கேது தோஷம் ஆகும்.
ராகு கேது ஆகிய இரு கிரகங்களில், இருவரில் ஒருவர் இரண்டில் இருந்தால் மற்றவர் எட்டில் இருப்பார்.
இரு நிழல் கிரகங்களில் ஒருவர் ஏழில் இருந்தால் மற்றவர் லக்னத்திலோ அல்லது ராசியிலோ இருப்பார். இதுவே ராகு கேது தோஷம் என சொல்லப்படுகிறது.
ராகு கேது இரு கிரகமுமே, ஜாதகத்தில் பாவகத்தில் அமர்ந்தால், அந்த குறிப்பிட்ட பாவகத்தில் தடைகளையும் தாமதங்களையும் ஏற்படுத்துவார்கள்
ஏழில் ராகு அல்லது கேது இருந்தால் திருமணம் தாமதமாகும்
ராகு கேது தோஷத்தை நீக்க, சிவ வழிபாடு முக்கியமானது, நவகிரகங்களை ஆட்டிப் படைக்கும் சிவனின் அருள் இருந்தால், நாள் என்ன செய்யும்? இல்லை கோள் தான் என்ன செய்யும்?
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது