செவ்வாய் காரகரான முருகனை பங்குனி மாத செவ்வாய்க்கிழமைகளில் வழிபட்டால் கிரக தோஷங்கள் முதல் பல தடைகளும் நீங்கும்
சஷ்டி, கிருத்திகை, உத்திரம் என முருகப்பெருமானுக்கு சிறப்பு வாய்ந்த நாட்களைப் போன்றே ஆண்டின் இறுதி மாதமான பங்குனியில் வரக் கூடிய செவ்வாய் கிழமைகளும் முருக வழிபாட்டிற்கு சிறந்தது
முருகப்பெருமானுக்கு உகந்த தினமான செவ்வாய்க்கிழமை, செவ்வாய் கிரகத்திற்கும் மிகவும் விசேஷமானது என்பதால், செவ்வாயன்று முருகனையும் செவ்வாய் கிரகத்தை சேர்ந்தே வணங்க வேண்டும்
வீட்டில் இறைவனை வழிபடுவது நல்லது என்றாலும், ஆலயம் சென்று வழிபடுவதற்கு சிறப்பான பலன்கள் உண்டு. ஆலயங்களில் ஆகம முறைப்படி பூஜை புனஸ்காரங்கள் செய்வது மற்றும் பலர் வந்து செல்வதால் ஏற்படும் சானித்தியம் நிறைந்திருக்கும்
நவகிரகங்கள் இருக்கும் முருகன் கோவிலுக்கு சென்று வழிபட்டால் சானித்தியம் எனப்படும் என்றும் நிறைவான வாழ்க்கை கிடைக்கும்
துவரம் பருப்பு, ஒரு ரூபாய் நாணயம், இரண்டு அகல் விளக்கு, நெய், பஞ்சத்திரி
நவகிரக சந்நிதிக்கு சென்று செவ்வாய் பகவான் முன் அகல்விளக்குகள் இரண்டையும் ஏற்றவும். ஒரு தொன்னையில் துவரம்பருப்பு மற்றும் ஒரு ரூபாய் நாணயத்தை வைத்து வணங்கவும்
நவகிரக வழிபாட்டை முடித்துக் கொண்டு, முருகப்பெருமானையும் வணங்கவும். பங்குனி மாத செவ்வாய்களில் மட்டுமல்ல, ஏழு செவ்வாய் கிழமையில் தொடர்ந்து இவ்வாறு செய்து வந்தால் கிரக தோஷங்கள் மற்றும் காரியத் தடைகள் நீங்கும்
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது