சிவனுக்கு உரிய திங்கட்கிழமை விரதத்தை ஆடி மாதத்தில் இருப்பதன் மூலம் விரும்பிய வரன் கிடைக்கும், வாழ்க்கையில் நிம்மதி பொங்கும்
ஆடி திங்கள் விரதம் இருப்பது எப்படி என பலருக்கு தெரிவதில்லை. ஆடி மாதம் வரும் ஐந்து திங்கட்கிழமைகளில் விரதம் இருப்க்கலாம்
முழு நாளும் ஒன்றும் சாப்பிடாமல் இருப்பது நல்லது, முடியாவிட்டால் பழங்களை மட்டும் உண்ணலாம்
உணவை தவிர்க்க முடியதவர்கள் மாலை பூஜைக்கு பிறகு உண்ணலாம். சிவனுக்கான சோமவார விரதத்தின்போது உப்பு சேர்த்த உணவை உண்ணக்கூடாது
சிவனுக்கு ஏன் ஆடி மாதம் பிடித்தது என்ற கேள்விக்கான விடை ஸ்கந்த புராணத்தில் உள்ளது
சிவனை மணக்க சதி தேவி விரதம் இருந்து மணம் புரிந்தார். சதி, விரதம் இருந்தது ஆடி மாதம் தான்
பிறகு தந்தையால் ஏற்பட்ட அவமானத்தால் உயிர் துறந்த சதி தேவி, மீண்டும் இறைவனை மணக்க பார்வதி தேவியாய் அவதரித்தார்
பார்வதி தேவியாய் பிறந்த சக்தி, சிவனை தவம் இருந்து மணந்தார். பார்வதியும் ஆடி மாத திங்கட்கிழமைகளில் விரதம் இருந்து சிவனை மணந்ததால், சிவனுக்கு ஆடி திங்கள் பிடித்தமானது என்பது புராணங்கள் சொல்லும் சாவன் சோமவார விரதக் கதை...