வைகாசி மாதத்தின் வளர்பிறை சதுர்த்தசி திதியில் நரசிம்ம ஜெயந்தி மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது
வாழ்க்கையில் மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் ஞானத்தைத் தருகிறது
மனிதன் (நர) மற்றும் சிங்கம் (சிம்ஹா) இணைந்த அவதாரம் நரசிம்ம அவதாரம். இறைவனை முழுமையாக நம்பினால் கை விடமாட்டார் என்பதை உணர்த்தும் அவதாரம் இது
நரசிம்ம ஜெயந்தி அன்று நரசிம்மரை வழிபடுவது சிறப்பான பலன்களைத் தரும். இந்த இருக்கும் விரதத்திற்கு, ஏகாதசி அன்று விரதம் இருப்பது போன்ற பலன்கள் கிடைக்கும்
பிரம்மாவிடம் இருந்து வரம் பெற்று மரணத்தை பாராமல் உலகில் வசித்து வந்த இரண்யகசிபுவை வதைக்க விஷ்ணு பகவான் நரசிங்க அவதாரம் எடுத்தார்
விஷ்ணுவின் மீது பக்தி கொண்ட பக்தனின் குரலுக்கு தெய்வம் என்ன செய்யும் என்பதை உணர்த்தும் அவதாரம் நரசிங்க அவதாரம் ஆகும்
கோபத்தில் கொந்தளித்துக் கொண்டே தூணைப் பிளந்து வெளிவந்த நரசிம்மர், அரக்கனை அந்தி சாயும் வேளையில் வாசற்படியின் மீது அமர்ந்து வதைத்தார்.
நரசிம்மரை, லட்சுமி நரசிம்மர் ரூபத்தில் வழிபடுவது சிறந்தது. ஏனென்றால், நரசிம்மர் உக்ரத்தின் வடிவம், அன்னை லட்சுமி அவரது கோபத்தைத் தணிக்க அவரது மடியில் அமர்ந்து காட்சியளிக்கிறார்