விமரிசையாக கொண்டாடப்பட்ட விநாயகர் சதுர்த்தி முடிவில், விநாயகர்களின் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு நீர்நிலைகளில் கரைக்கப்படவிருக்கின்றன
தென் மாநிலங்களில் விநாயகர் சதுர்த்தி முடிந்த 3 அல்லது ஐந்தாம் நாள் சிலைகள் கரைக்கப்பட்டன
மகாராஷ்டிர மாநிலம் உள்ளிட்ட வட மாநிலங்கள் பலவற்றில் நாளை விநாயகரை வீட்டிற்கு வழியனுப்பி வைக்கின்றனர்
விநாயகருக்கு பிடித்த பழங்கள், கொழுக்கட்டை என நைவேத்தியம் செய்து பத்து நாட்கள் பூஜையில் இருந்த விநாயகர் இனி இயற்கையுடன் ஒன்றாவார்
விநாயகர் சதுர்த்தியில் தொடங்கிய விநாயக உற்சவம் முடிவடைந்து கணபதியை விசர்ஜனம் செய்து வழியனுப்பும் நாள் இந்த ஆண்டு செப்டம்பர் 17 ஆகும்.
ஆண்டின் மிகவும் சிறப்பு வாய்ந்த நாட்களில் ஒன்று, அன்று தான் விநாயகர் விசர்ஜனம் நடைபெறும்
இந்தக் கட்டுரையில் இடம் பெற்றுள்ள தகவல்கள் பொதுவானவை. பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், நம்பிக்கைகளின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரைக்கு ஜீ நியூஸ் பொறுப்பேற்காது