நிழல் கிரகங்களான ராகு மற்றும் கேது ஒருவருக்கு ஒருவர் தொடர்புடையவர்கள் என்றாலும், இருவரின் இயல்பும் ஒன்றுக்கொன்று முற்றிலும் எதிரானது
புத்திக்காரகர் என்று அழைக்கப்பட்டாலும், ஒருவரின் ஜாதகத்தில் கேது கெட்டுப்போனால் மோசமான பிரச்சனைகள் ஏற்படும்
ஜாதகத்தில் கேது மோசமாக இருந்தால், ஒருவர் தனது வருத்தங்களை வெளிப்படுத்தாமல், தங்களுக்குள் வைத்துக் கொள்பவர்களாக இருப்பார்கள்
மனதில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால், அதையே நினைத்துக்கொண்டிருப்பார்கள்
பழைய விஷயங்களை நினைவில் வைத்துக் கொண்டு வாழ்க்கையை நொந்துக் கொண்டிருப்பார்கள்
வயிற்றில் பிரச்சனை ஏற்பட்டால் அதற்கு ஜாதகத்தில் கேது இருப்பதும் காரணமாக இருக்கும். நோயைப் பற்றியே அதிகமாக நினைத்து அதிலேயே ஆழ்ந்துவிடுவார்கள்
ஜாதகத்தில் மோசமான கேது பகவானை சீர் செய்ய, கணபதியை சரணடைய வேண்டும். விநாயகர் வழிபாடு விகங்களைத் தீர்க்கும் என்பதுடன் கேதுவின் கெடுபலன்களையும் குறைக்குக்ம்
இணையத்தில் உள்ள தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்களை ஜீ நியூஸ் தனிப்பட்ட முறையில் சரிபார்க்கவில்லை