தேய்பிறை ஏகாதசியை அஜ ஏகாதசி என்று அழைக்கிறோம். அஜ ஏகாதசியில் விரதம் இருந்தால் பகவன் விஷ்ணுவின் அருள் கிடைக்கும்
அஜ ஏகாதசி நாளில் விரதம் அனுஷ்டித்து விஷ்ணுவின் அருள் பெற்றால் நாம் தெரிந்தும் தெரியாமலும் செய்த பாவங்கள் அனைத்த்தும் தீர்ந்துவிடும்
குரோதி ஆண்டில் அஜ ஏகாதசி எப்போது அனுசரிக்கப்படுகிறது? தேதி, நேரம் மற்றும் முக்கியத்துவம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
மதியம் 1:19 மணிக்கு தொடங்கி மறுநாள் ஆகஸ்ட் 30 ஆம் தேதி மதியம் 1:37 மணிக்கு ஆ ஏகாதசி திதி இருக்கிறது. உதயதிதியின் படி, அஜ ஏகாதசி விரதம் ஆகஸ்ட் 29 அன்று அனுசரிக்கப்படும்.
ஏகாதசியில் விரதம் இருப்பதன் மூலம், அஸ்வமேத யாகம் செய்ததைப் போன்ற புண்ணிய பலன்கள் கிடைக்கும்
ஆடி பௌர்ணமியில் இருந்து கார்த்திகை பௌர்ணமி வரையான காலம் சாதுர்மாஸ்ய விரத காலம் ஆகும்
சாதுர்மாஸ்ய காலத்தில் வரும் ஏகாதசிகள் பிற ஏகாதசி நாட்களை விட மிகவும் சிறப்பு வாய்ந்தவை
தசமி திதி அன்று, இரவு உணவைத் தவிர்த்துவிட்டு மறுநாள் காலையில் நீராடி மகாவிஷ்ணுவை வணங்கி விரதம் இருக்க வேண்டும், துவாதசியன்று காலையில் மகாவிஷ்ணுவை பூஜித்து, ஏழைகளுக்கு அன்னதானம் அளித்த பிறகு, அகத்திக் கீரை, நெல்லிக்காய், சுண்டைக்காய் சேர்த்து சமைத்த உணவு அருந்தி விரதத்தை முடிக்க வேண்டும்
பாரம்பரிய நம்பிக்கைகள், தொன்றுதொட்டு தொடரும் நம்பிக்கைகள், பழக்கவழக்கங்களின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரையின் உள்ளடகத்திற்கு ஜீ மீடியா பொறுப்பேற்காது